×
 

எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதுவரைக்கும் 4100-க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 04 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்  மத்திய அமைச்சரும், பாஜக முன்னாள் மாநில தலைவருமான பாஜக வேட்பாளர் எல்.முருகன், அவிநாசியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் சென்று வேட்புமணு தாக்கல் செய்தார். அதேபோல் சாத்தூரில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராமேக்வாலுடன் சென்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல்  செய்தார்.

எல்.முருகன் சொத்து மதிப்பு: 

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னுடைய ஆண்டு வருமானம் 12, 96,000 ரூபாய் எனவும் தனது மனைவியின் ஆண்டு வருமானம் 36 லட்சத்து ஐந்தாயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார் மேலும் கடந்த ஆண்டு தனது வருமானம் 10 லட்சத்து 56 ஆயிரம் எனவும் அதேபோல் தனது மனைவியின் கடந்த ஆண்டு வருமானம் 27 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்... வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

 மேலும் இவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு 75 லட்சத்து 84 ஆயிரம் எனவும் மனைவியின் அசையும் சொத்து ஒரு கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம் எனவும் அசையாத சொத்துக்கள் 69 லட்சத்து 50 ஆயிரம் எனவும் மனைவியிடம் ஒரு கோடியே 65 லட்சத்து 75 ஆயிரம் சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்  20 லட்சம் ரூபாய் தனக்கு வங்கி கடன் உள்ளதாகவும் தனது மனைவி பெயரில் 18 லட்சத்து 62 ஆயிரம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கையிருப்பாக தன்னிடம் 60 ஆயிரம் ரூபாய் உள்ளதாகவும் தனது மனைவியிடம் எழுபதாயிரம் ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வேட்பு மனுவில் தன்னிடம் ஒரு கார் தனது மனைவிடம் ஒரு இருசக்கர வாகனம் மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நயினார் சொத்து மதிப்பு: 

நயினார் நாகேந்திரன் பெயரில் அசையும் சொத்து 12.50 கோடிகு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரது துணைவியார் சந்திரா நாகேந்திரன் பெயரில் 11.61கோடிக்கும் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் பெயரில்  8.26 கோடிக்கும், துணைவியார் பெயரில் 6.17 கோடிக்கும் அசையா சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் நயினார் நாகேந்திரன் பெயரில் ரூ.2.6 கோடி மதிப்பிலான 240 சவரன் நகையும், அவரது மனைவி பெயரில் ரூ.6.2 கோடி மதிப்பில் 560 சவரன் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் ரூ.1.94 கோடி கடனும் தனது மனைவி பெயரில் ரூ.65 லட்சம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பெயரில்  1.94 கோடி ரூபாயும், துணைவியார் பெயரில் 65 லட்சம் ரூபாயும் கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share