×
 

“வெள்ளை சட்டை, ஸ்மார்ட் வாட்ச்” ... மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்த அண்ணாமலை... கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது பண்ணையில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. 

தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு இளைஞர்கள் மத்தியில் கட்சிக்கு மவுசு கூடியது. இதனையடுத்து அண்ணாமலைக்கும் பாரத பிரதமர் மோடி டு மத்திய அமைச்சர் அமித் ஷா வரை நல்ல மரியாதை கிடைத்தது. 

விரைவில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என பேசப்பட்ட நிலையில், அதிமுக - பாஜக கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டது. அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சிப்பதாக கூறி அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. 

இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைக்க டெல்லி மேலிடம் விருப்பப்பட்டது. இதையடுத்து அண்ணாமலையின் பதவிக்காலமும் முடிந்ததால் அவரது தலைவர் பதவி நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், எம்.பி. பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: ஆணையம், குழுவால் என்ன பயன்? கொஞ்சம் சொல்லுங்க ஸ்டாலின்! அண்ணாமலை சரமாரி கேள்வி…!

ஆனால் பாஜக - அதிமுக கூட்டணியால் அப்செட்டான அண்ணாமலை, அரசியல் செயல்பாடுகளை குறைத்துக் கொண்டார். கோவை அருகே நிலம் வாங்கிய அண்னாமலை அதில் இயற்கை விவசாயம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் மற்றும் கையில் ஸ்மார்ட் வாட்ச் உடன் அண்ணாமலை மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் அதேசமயத்தில் நெட்டிசன்களின் விமர்சனங்களும் குவிந்து வருகிறது. உலக வரலாற்றிலேயே முதல் முறையாக வெள்ளை சட்டையும், கையில் ஸ்மார்ட் வாட்ச் அணிந்து சாணி அள்ளும் விவசாயி அண்ணாமலை தான் என கலாய்த்து வருகின்றனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் #ஆட்டுக்குட்டி_அண்ணாமலை..,

இந்த கண்காட்சியை நீங்க எங்குமே பார்க்க முடியாது...

ஸ்மார்ட் வாட்ச், பேண்ட், பிராண்ட் ஒயிட் ஷர்ட் போட்டுகிட்டு சானம் அள்ளுற ஒரே ஆளு நம்ப ஆட்டுக்குட்டி தாங்க..

வர வர விளம்பரத்துக்கு ஒரு அளவில்லாமல் போச்சி...#ஆடு போய்… pic.twitter.com/8VhDv5L6xk

— Vetriselvan Sankarதமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@kunavasalVETRI) October 24, 2025

இன்னும் சிலரோ பாஜகவில் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து வெறுத்துப் போன அண்ணாமலையோ இயற்கை விவசாயத்தில் களமிறங்கிவிட்டார் என விமர்சித்துவருகின்றனர். 

மக்கள் _
அண்ணாமலை அவர்கள் தற்போது தீவிர அரசியலில் இருந்து சிறிது விலகி இருக்கிறார் இப்போதும் நீங்கள் விமர்சனம் செய்வது ஏன்?

⚫😋🔴திமுக 200₹_
கடந்த 4 வருடங்களாக அவருடைய மூத்திரத்தை குடித்து பழகி விட்டது அந்த பழக்கத்தை விட முடியவில்லை அதனால் அவரைப் பற்றி விமர்சனம் செய்கிறோம். pic.twitter.com/aqxQbO8StY

— CM Annamalai Ji 2026 🧡💚 (@Manikan40239402) October 25, 2025

இந்த கமெண்ட்களைப் பார்க்கும் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களோ, இதெல்லாம் திமுக உ.பி.க்களின் வேலை என்றும், வயலில் சிவப்பு கம்பளம் விரித்து நடப்பது, பிளாட் பார்ம் அமைப்பது நடப்பது என காமெடி செய்யும் திமுகவுக்கு அண்ணாமலையை விமர்சிக்க தகுதியில்லை என பதிலடி கொடுத்து வருகின்றனர். 


 

இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share