×
 

குறுக்கு வழி..! திமுக, அதிமுக, பாஜக கூட்டுசதி..! அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு..!

சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக தயவுடன் திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அதை சகிக்க முடியாமல் கூட்டணி கட்சிகள் வெளியேறியுள்ளன. குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சி தான் என்பது உறுதியாகியுள்ளது என்றும் ஆளுநரை சந்தித்தது வழக்கமான அலுவல் நடைமுறை தான் என நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். மேலும், மூத்த தலைவரான வைகோ, என்றும் பதவிக்காக ஆசைப்பட்டவர் இல்லை என்றும் அவர் கூறினார் .

குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க திமுக தலைவர்கள், எம்எல்ஏக்கள் சிலருக்கு விருப்பம் இல்லை என்றும் இ.பி.எஸ். மற்றும் ஸ்டாலின் தங்களின் குடும்ப சொத்துகளை காக்க ஆட்சி அமைக்க குறுக்கு வழியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறியுள்ளார். பா.ஜ.க.வின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க தி.மு.க. முயற்சி எடுக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மலையாய் குவிந்த பிரச்சனை"..! தேவையற்ற பேச்சு... அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய H.ராஜா..!

இன்னமும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயல்வதால் அ.தி.மு.க.வில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். இன்று காலை வரையிலும் கூட குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க தி.மு.கவும், அ.தி.மு.க.வும் முயற்சி செய்வதாகவும் பிற கட்சிகளில் இருந்து யாராவது வெளியேறினால் அதற்கும் த.வெ.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். எந்த கட்சியில் இணைவது,எந்த அரசியல் இயக்கத்தில் இணைந்து செயல்படுவது என்பது அவரவர் முடிவு என்றார். 

இதையும் படிங்க: “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share