×
 

"செந்தில் பாலாஜி ஒன்னுமே செய்யல"..! வெறும் அறிவிப்புதான்... அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எதுவும் செய்யவில்லை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த DMK ஆட்சியில் மின்சாரத் துறையில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக தவெக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சோலார் திட்டங்கள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல், மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் பரவலாக இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு மெகாவாட் சோலார் இணைப்புக்கு ரூ. 25 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை ஜூன் 16 அன்று வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, மின்சாரத் துறை சார்பில் தனி வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய கடன் 2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி ரூபாயாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் புதிதாக எதுவும் செய்யப்படவில்லை என்றும் ஆனால் 51 ஆயிரம் கோடி ரூபாய் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மின்சாரத் துறையில் புதிதாக டிரான்ஸ்பார்மர் வாங்கவில்லை என்றும் முந்தை ஆண்டுகளில் செய்ததை தான் செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். மின்சாரத் துறையில் புதிதாக எதுவும் செய்யப்படாமல் செலவுகள் எப்படி அதிகமானது என்று அமைச்சர் நிர்மல் குமார் கேட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் 343 பேரை மட்டுமே வேலைக்கு எடுத்துள்ளார்கள் என்றும் திமுக ஆட்சியில் வருவாய், செலவு, கடன் அதிகரித்தாலும் வெறும் 343 பெயரை மட்டுமே வேலைக்கு எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சோலார் மின் உற்பத்தி..! சிலர் தூண்டுவதால் மக்கள் போராடுறாங்க..! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

மின்சாரத் துறையில் பணியாளர் நியமனத்தில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் நிர்மல் குமார் தமிழகத்தில் அதிக பணிச்சுமை உள்ள துறை மின்சார துறை என்றும் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி நிறைய அறிவிப்புகள் தான் கொடுத்தார் என்றும் ஆனால் எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நான்கு லட்சத்து 47 ஆயிரத்து 63 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளதாகவும் அதில் 42,808 டிரான்ஸ்பார்மர் 25 ஆண்டுகள் கடந்தவை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உடனடியாக 231 துணை மின் நிலையங்கள் தொடர்ந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சி நிதி கொடுத்தவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் அவர்களிடம் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி அளித்தார். 

இதையும் படிங்க: "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share