நிதீஷ் ஆதரவு இல்லாமலேயே பாஜக ஆட்சி அமைக்கலாம்...! பெரும்பான்மை பெற்று அசத்தல்
பாஜக 95 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் நிதிஷ்குமார் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பீகாரின் அரசியல் களம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியுள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பீகார் சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்ட பிறகு இன்று முடிவுகள் வெளியாகும். இதனால் பீகாரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். பாஜக 95 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நிதீஷ் குமார் கட்சி 84 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "Wait and see" - அதிமுக+பாஜக கூட்டணியில் இணையப் போகும் முக்கிய கட்சி... ஹின்ட் கொடுத்த நயினார் நாகேந்திரன்...!
பாஜக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 95 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் நித்திஷ் குமார் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைக்க முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பாஜக தனித்து ஆட்சி அமைக்காது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் நிதீஷ் குமார் கட்சியின் எம்பிக்கள் ஆதரவு பாஜகவுக்கு இருப்பது காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்து தமிழ்நாட்டிலும் வெற்றி தான்... தமிழிசை சௌந்தரராஜன் சூளுரை...!