தலைக்கு ரூ.500 - டெல்லியில் கிழிந்து தொங்கிய ராமதாஸ் முகமூடி... டிக்கெட்டு காசை கணக்கு பார்த்து மொத்தமா போச்சே...!
டெல்லியில் நடந்த ராமதாஸ் தரப்பு பாமக போராட்டத்தில் வடமாநிலத்தவர்கள் பங்கேற்றது கேலிக்கூத்தாகியுள்ளது.
அன்புமணிதான் பாமகவின் தலைவர் என அங்கீகரித்த தேர்தல் ஆணயத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய ராமதாஸ் தரப்பு தலைக்கு 500 ரூபாய் கொடுத்து வட மாநில இளைஞர்களை இறக்கவிட்டு கூட்டம் காண்பித்தது சமூக வலைதலங்களில் கேலிக்குள்ளாக்கி உள்ளது.
தேர்தல் ஆணயத்திற்கு எதிராக ராமதாஸ் தரப்பு பாமக நடத்திய போராட்டத்தால் தலைநகர் டெல்லியே ஸ்தம்பிக்கும் என்று பார்த்தால் வேடிக்கை பார்க்கும் அளவுக்குதான் போராட்டம் நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பாமகவுக்கு அன்புமணி தான் தலைவர் என குறிப்பிட்டு சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் தரப்புக்கு தேர்தல் ஆணை ஆணயம் கடிதம் எழுதியது. பாமகவிற்கு யார் தலைவர் என நீடித்து வந்த குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில் தேர்தல் ஆணயத்தின் கடிதம் இருந்தது. இதன் காரணமாக தேர்தல் ஆணயம் மீது விமர்சனங்களை அள்ளி வீசிய ராமதாஸ், தேர்தல் ஆணயத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
டெல்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏக்களான ஜி. கே மணி, அருள் உள்ளிட்டோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் இந்தி பேசும் வடமாநில இளைஞர்களை இறக்கிவிட்டு கூட்டம் காண்பித்த கொடுமை அரங்கேறியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 120 பேர் என்றால் அதில் 70 பேர் வடமாநில இளைஞர்கள் தான் என கூறப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்றிருப்பது வடமாநில இளைஞர்கள் என தெரியக்கூடாது என்பதற்காக ராமதாஸின் முகமூடியை போட்டுவிட்டு அழைத்து வந்ததாகவும் அப்பட்டமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அராஜகம் செய்யும் தேர்தல் ஆணையம்..!! டெல்லிக்கு போகும் பாமக..!! களமிறங்கிய ராமதாஸ்..!!
தமிழ்நாட்டில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் செலவு எகிறம் என கணக்கு போட்ட பாமகவினர், அங்கேயே தலைக்கு 500 ரூபாய் கொடுத்து வடமாநிலத்தவர்களை பாமக போராட்டக்காரர்களான அழைத்து வந்துள்ளனர். பாமக மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரும் 2 பேரை அழைத்து வந்திருந்தால் கூட ஆஹா... ஓஹோ என கூட்டம் கூடியிருக்கும். ஆனால் டிரெயின் டிக்கெட், சாப்பாடு, தங்கமிடம் என செலவு கணக்கு போட்டு பார்த்த ராமதாஸ் தரப்பு ஏற்பட்டாளர்கள், சிம்பிளாக செலவை குறைக்க போட்ட திட்டம், பெரும் அவமானத்தை தேடி தந்துள்ளது.
மூத்த அரசியல்வாதியாக இருக்கும் ராமதாஸ் தனது அரசியல் அனுபவத்தில் எவ்வளவோ கூட்டத்தை பார்த்திருப்பார் ஆனால் தனக்கே இப்படி ஒரு நிலைமை வரும் என நினைத்திருக்க மாட்டார். கடந்த செப்டம்பர் மாதம் கிருஷ்ணகிரியில் ராமதஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது வடமாநில இளைஞர்கள் மற்றும் பெண்களை அழைத்து வந்து காலி சேர்களை நிரப்பிய சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலானது. சாதாரண கூட்டம் என்றால் யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் பொதுக்குழுவிற்குள் இப்படி வடமாநிலத்தவர்களை அனுமதிக்கலாமா? என சகட்டுமேனிக்கு கேள்விகள் எழுந்தன. அதில் இருந்து கொஞ்சமும் பாடம் கற்காமல், இந்தியாவின் தலைநகரான டெல்லி வரை சென்று ராமதாஸ் தரப்பு பாமகவினர் தங்கள கட்சி பெருமையை காற்றில் பறக்கவைத்துள்ளார்கள் என விமர்சிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதையும் படிங்க: “வயிறு எரிஞ்சு சொல்றேன்... இதோட உன் அரசியல் பயணம் முடிஞ்சு போச்சு...” - அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்...!