×
 

48 மணி நேரம் தான்! End card போட்டது வடகிழக்கு பருவமழை!! இன்று எங்கெல்லாம் மழை!

'தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை, இரண்டு நாட்களில் விலகும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் முழுமையாக விலகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் ஆண்டு மழைத் தேவையில் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஆண்டு (2025) அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கிய இப்பருவமழைக்கு டிசம்பர் 31 வரை இயல்பாக 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால், இதுவரை 42 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது இயல்புக்கு மிக அருகில் உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், வானிலை மாற்றங்கள் காரணமாக வடகிழக்கு பருவமழை விரைவில் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இன்று மாலைக்குள் கரையை கடக்கும்!! வெதர் அப்டேட்!!

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் 13 செ.மீ. பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திருக்குவளை, திருப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில், சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம் போன்ற பகுதிகளில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான பனிமூட்டமும் இருக்கும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பருவமழை விலகுவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம்! வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு! கனமழை அலர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share