×
 

திணறும் BLO-க்கள்... லட்சக்கணக்கானோர் வாக்குரிமை பறிபோகும்... என்.ஆர் இளங்கோ எச்சரிக்கை..!

எஸ் ஐ ஆர் பணிகளில் உள்ள குளறுபடிகள் மற்றும் இபிஎஸ் குற்றச்சாட்டு உள்ளவைகளுக்கு என். ஆர் இளங்கோ பதில் அளித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக பேசினார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான குளறுபடிகள் மற்றும் அதிமுகவினரின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்தார். மக்களின் வாக்கு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் கட்டளையிட்டுள்ளதாக தெரிவித்தார். பாக நிலை முகவர் நாளொன்றுக்கு 50 படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

திமுகவினருக்கு மட்டுமே கணக்கீட்டு படிவங்கள் கொடுப்பதாக கூறுவது தவறு என்றும் தெரிவித்தார். பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்பதற்காக மட்டுமே அதிமுகவினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை திமுக தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு BLO - க்களே திணறும் நிலையில் உள்ளனர். கணக்கிட்டு படிவத்தை நிரப்பி தர தேவையில்லை என அசாமுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் சலுகை அளிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தான் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை இருப்பதாக தெரிவித்தார். மேலும் குளறுபடியுடன் முறையற்ற வகையில் செய்யப்படும் எஸ்ஐஆர் பணியால் லட்சக்கணக்கானோர் வாக்குரிமை பறிபோகும் என்றும் எச்சரித்தார்.

இதையும் படிங்க: இதனால பெரிய குழப்பம்... சும்மா கணக்கு காட்டுறாங்க..! SIR விவகாரத்தில் NR இளங்கோ காட்டம்...!

முறையான வாக்காளர் பட்டியல் தேவை என்பது தான் திமுகவின் நிலைப்பாடு என்றும் BLO - க்களே திணறும் நிலையில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்ய மக்களுக்கு பாக முகவர் உதவி வருகின்றனர் என்றும் தெரிவித்தார். தேர்தல் ஆணைய உத்தரவின்படி தான் பாக முகவர்கள் படிவங்களை பூர்த்தி செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அவசர அவசரமாக SIR... 6 கோடி பேருக்கு வாக்குரிமை பறிபோகும்... சீமான் எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share