×
 

“கேடுகெட்ட கூட்டத்திடம் நாடு சிக்கி தவிக்குதுய்யா” ..! திமுக அடிமை-னு சொல்ல பெருமையா.? பல்லடத்தில் சீமான் பரப்புரை..!

பல்லடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி போடுகிறது. 117 ஆண்கள், 117 பெண்கள் என வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். சீமான் காரைக்குடியில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் சீமான் திமுக ஆட்சியின் அவலங்கள் என்று கூறி பல்வேறு மக்கள் பிரச்சனைகளை எடுத்து கூறி வருகிறார். இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். நான் அடிமை, திமுக பரம்பரை என பெருமை பேசுகிறார்கள் என்று கிண்டலடித்துள்ளார்.

மக்களை ஏமாற்றிவிட்டு நல்லாட்சி தருவதாக கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். தனது பிரச்சாரத்தின் போது ஓநாய் கதையை கூறி சீமான் பேசினார். 

இதையும் படிங்க: பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

எப்ப வரும் நல்லாட்சி… என் ஜனமும் ஏங்குதையா… கேடுகெட்ட கூட்டத்திடம் நாடு சிக்கி தவிக்குதயா… என சீமான் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார். காசு கொடுக்காமலேயே நாம் தமிழர் பிரச்சாரத்திற்கு கூட்டம் வரும் என்று அது தான் புரட்சி என்றும் தெரிவித்துள்ளார். இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்காத கட்சி நாதக தான்... அவங்களே சொல்லிட்டாங்க..! சீமான் பரப்புரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share