×
 

நாதக வேட்பாளர்கள் யார் யார்?.. இன்று அறிவிக்கிறார் சீமான்.! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இரண்டு தனித் தொகுதிகளும் காலியானது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல் மற்றும் பி. சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டது. தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அமைந்துள்ள இந்த இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி உறுதியாகி வருகிறது.

திமுக முதலில் களத்தில் இறங்கியது. மதுராந்தகம் தொகுதிக்கு வழக்கறிஞரும் கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ. பரந்தாமனை வேட்பாளராக அறிவித்தது. அவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதுடன், கட்சியில் செயல்படும் முக்கிய முகங்களில் ஒருவராக அறியப்படுகிறார். தாராபுரம் தொகுதிக்கு வழக்கறிஞர் எஸ். சுகன்யாவை நிறுத்தியுள்ளது. இளம் முகம் என்றாலும் கட்சிப் பணியில் ஈடுபட்டு வருபவர்.அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகம் தனது வேட்பாளர்களை அறிவித்தது. மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேலையும், தாராபுரத்தில் பி. சத்யபாமாவையும் மீண்டும் களமிறக்கியுள்ளது. இருவரும் இத்தொகுதிகளிலேயே சமீபத்திய பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் ஆளும் கட்சியில் இணைந்தவர்கள்.

தவெக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் உள்ள மரகதம் குமாரவேலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராகச் செயல்படும் சத்யபாமாவும், கட்சியின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.அதிமுகவும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதிக்கு கணிதா சம்பத்தை நிறுத்தியுள்ளது. இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தாராபுரம் தொகுதிக்கு பானுமதியை வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் நாதக..! வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சீமான்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

அதிமுக இந்தத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.இந்த மூன்று கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், நாம் தமிழர் கட்சியும் களமிறங்கும் என்பது உறுதியாகிவிட்டது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். கட்சித் தொண்டர்கள் மத்தியில் சில தயக்கங்கள் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கொள்கையை முன்வைத்து இந்தப் போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நான்கு முனைப் போட்டி முழுமையாக உருவாகியுள்ளது.

இந்த இடைத்தேர்தல் ஆளும் தவெக அரசுக்கு முதல் அக்னிப் பரீட்சையாக அமைந்துள்ளது. சமீபத்திய பொதுத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும், தவெக இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. திமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இப்போது அதிமுகவிலிருந்து மாறிய வேட்பாளர்களைத் தவெக நிறுத்தியுள்ளதால், உள்ளூர் அரசியல் சமநிலை மாறியுள்ளது. திமுக தனது பழைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை இழந்த நிலையில் தனியாகப் போராட வேண்டியுள்ளது. அதிமுக தனது பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது. நாம் தமிழர் கட்சி தனது தனித்துவமான கொள்கைகளை முன்வைத்து வாக்குகளைப் பிரிக்கும் காரணியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இதையும் படிங்க: இப்படி தான் கடனை குறைப்பீங்களா.? எதுக்கு அறிக்கை.? எதுக்கு விவாதம்... விளாசிய சீமான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share