×
 

நாடே சுடுகாடாக மாறிவிடும்... பாஜகவை போட்டு பொளந்தெடுத்த சீமான்... மத அரசியல் குறித்து ‘நச்’ பதிலடி...!

பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூட கிறிஸ்துவ பள்ளிகளில் படித்தார்கள் அவர்களை யாரும் மதம் மாற்றவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக-வை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டுமென நாதக-வினர் முனைப்புக் காட்டுகின்றனர். இந்த நிலையில், பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது நாதக. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களையும் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார்.

இதற்காக திருச்சியில் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன். படையை வழி நடத்தி செல்பவர்களும் களத்தில் தான் இருக்க வேண்டும். எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பது குறித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்தும் எந்த எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது குறித்தும் 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்.

தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் மதம் மாற மாணவிக்கு  அழுத்தம் கொடுத்தார்கள் என்பதை ஏற்க முடியாது. பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூட கிறிஸ்துவ பள்ளிகளில் படித்தார்கள் அவர்களை யாரும் மதம் மாற்றவில்லை. தஞ்சை மைக்கேல்பட்டி மாணவி விவகாரத்தில் பா.ஜ.க செய்தது ஒரு அரசியல் தான்.

இதையும் படிங்க: திருச்சியில் நாதக மாபெரும் மாநாடு..! 234 தொகுதி வேட்பாளர்களை மேடையேற்றும் சீமான்..! நேரில் ஆய்வு..!

மனிதம் தான் அரசாட்சி செய்ய வேண்டும். குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் மட்டும் வாழும் நாடாக இந்த நாடு இருக்க வேண்டும் என ஒரு கட்சி கூறுகிறது.மதமும் ஜாதியும் ஆட்சி செய்யுமென்றால் நாடு சுடுகாடாக மாறி விடும். மனிதம் தான் புனிதம். மொழி வழிதான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு  மதத்தை முன்னிருத்தி ஒரே நாடு ஒரே மதமாக மாற்ற முடியாது. வெறுப்பரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்றார்.
 

இதையும் படிங்க: மனசாட்சி இல்லையா? இலங்கை முகாமில் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share