×
 

ஒட்டு போட்ட சட்டை போல 150 கட்சிகளோடு கூட்டணி... விஜயை விளாசி தள்ளிய சீமான்...!

ஒட்டுப்போட்டு சட்டை வைத்ததை போல, 10 வீட்டில் வங்கி கூட்டாஞ்சோறு செய்தது போல 150 கட்சியை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளார் விஜய். 

கோவை செல்வபுரத்தில் தொண்டாமுத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்த சீமான் பேசியதாவது  : தொண்டாமுத்தூரில் போட்டியிடுபவர்கள் குறைந்தது ரூ.30 கோடி செலவு செய்வார்கள். ரூ.30 கோடி முதலீடு செய்தால் எம்.எல்.ஏ வாக இருந்தால் ரூ.300 அல்லது அமைச்சராக இருந்தால் ரூ.30 ஆயிரம் கோடி ஈட்டிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்கிறார்கள.

234 வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழர் தான் பெரிய கட்சி, விஜய் பெரிய கதாநாயகன் என்றார் 150 பேரை ஒட்டுப்போட்டு சட்டை தைத்தது போல, கூட்டாச்சோறு ஆச்சியதை போல கட்சியில் சீட்டு கிடைக்காதவர்களை இரவோடு இரவாக அழைத்து வந்து சீட்டு கொடுத்து நிறுத்தியுள்ளார்.

கேட்டால் யாரோடும் கூட்டணி இல்லை என்றார். ஸ்டாலின் 22 கட்சி, எடப்பாடி 10 கட்சி ஆனால் 150 கட்சியோடு கூட்டணி வைத்தவர் விஜய் தான்.

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்... புதுவையில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி..!! தொண்டர்கள் குஷி..!

முதல் தேர்தலில் தனித்து நின்று 4.5 லட்சம் வாக்குகளை பெற்று இறுதியாக 36 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். இவ்வளவு உயர்த்திய மக்கள் எங்களை முதல் இடத்திற்கு கொண்டு வர எவ்வளவு நேரம் ஆகும். திரையிலேயே தலைவனை தேடாதே, தரையில் நிற்பனை தேடு என்றார். 

இதற்கு முன்னதாக கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட போதும் சீமான் விஜயை சரமாரியாக விமர்சித்தார். கூட்டத்தில் நிற்க வீரமும் துணிவும் தேவையில்லை, தனியாக நிற்கவே வீரம் வேண்டும்.தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவனே இரண்டு தொகுதியில் போட்டியிடுவேன். நம்பிக்கையோடு இருங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார். ஆனால் உனக்கே நம்பிக்கை இல்லையே

இரண்டு முறை  நான் தோற்றேன். என்னை தோற்கடித்தவர் என் தாய் தந்தை தான். ஒரு நாள் இந்த பிள்ளைகளை கொண்டாடும் காலமும் வரும். ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது மக்கள் விரோதம்.எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவில்லை. எது சரியோ அதற்கு ஓட்டுப்போடுங்கள்.

இதையும் படிங்க: தவெக வேட்பாளர் மீது பொய் பாலியல் புகார்..! எஸ் பி அலுவலகம் முற்றுகை.. பரபரப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share