அமித்ஷா செயல்பாடுகளில் அதிருப்தி!! பாஜகவுக்கு எதிராக திரும்பிய ஓபிஎஸ்! தவெகவுக்கு ரூட்டா?
மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தற்போது எதிர்க்க துவங்கி உள்ளார்.
முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம், மத்திய பா.ஜ.க. அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், தற்போது அவர் மத்திய அரசை விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற அமைப்பை நடத்தி வரும் பன்னீர்செல்வம், கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம், மத்திய பா.ஜ.க. அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், தற்போது அவர் மத்திய அரசை விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஊழல் பண்ண முடியாதுனு கவலையா? இபிஎஸ்-ஐ கேள்வி கேட்ட ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!
அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற அமைப்பை நடத்தி வரும் பன்னீர்செல்வம், கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதை அறிந்த பா.ஜ.க. தேசிய தலைமை அவரை டில்லிக்கு அழைத்தது. அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பன்னீர்செல்வம், தன்னையும் தன் ஆதரவாளர்களையும் அ.தி.மு.க.வில் இணைக்க வலியுறுத்தினார். அமித் ஷா "சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறியதாக தெரிகிறது. பா.ஜ.க. தலைமை பழனிசாமியிடமும் இது தொடர்பாக பேசியது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.வில் இணைத்தால் ஏற்போம் என்றாலும், பா.ஜ.க.வுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிடக் கூறினால் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதனால் குழப்பம் அடைந்த பன்னீர்செல்வம், இதுவரை பா.ஜ.க.வை விமர்சிக்காமல் இருந்த நிலையில், தற்போது விமர்சனம் தொடங்கியுள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு பதிலாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய மசோதாவை கடுமையாக விமர்சித்தார்.
இந்த மசோதாவின்படி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் என்றும், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு நிதி குறையும் என்றும் கூறினார். மத்திய உதவி 60 சதவீதமாக குறைக்கப்பட்டு மாநிலங்களுக்கு கூடுதல் சுமை திணிக்கப்பட்டுள்ளதாகவும், இது தமிழகத்துக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பா.ஜ.க.வுடனான உறவில் ஏற்பட்ட மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! மதக்கலவரத்தை துாண்டுகிறது திமுக! அண்ணாமலை ஆவேசம்!