ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும், திறந்து விடுங்கள்!! ஈரானுக்கு ஐ.நா வேண்டுகோள்!
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும், திறந்து விடுங்கள் என ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் ஈரானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், உலகின் மிக முக்கிய எரிசக்தி போக்குவரத்துப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தி இன்னும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆன்டோனியோ குட்டரெஸ், “ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் நான் வலியுறுத்துகிறேன். ஹார்மூஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள். கப்பல்கள் செல்லட்டும். எந்தவித சுங்கவரியும் வேண்டாம். பாகுபாடு காட்ட வேண்டாம். வர்த்தகம் மீண்டும் தொடங்கட்டும். உலகப் பொருளாதாரம் இயங்கட்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்ல போரை நிறுத்துங்க!! ஹார்முஸை திறக்கலாம்!! அப்புறம் அணுசக்தி பற்றி பேசலாம்!! ஈரான் கறார்!!
மேலும் அவர், “பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து என்பது வெறும் பொருளாதாரக் கட்டாயம் மட்டுமல்ல, அது ஒரு மனிதாபிமானக் கட்டாயமும் கூட” என்று வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்காலிக போர் நிறுத்தம் அமைதிப் பேச்சு வரை நீடிக்கும் என்று கூறியிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சு இன்னும் தொடங்கவில்லை. ஈரான் தரப்பு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதால் பேச்சு முட்டுக்கட்டையில் உள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் உலகப் பொருளாதாரம் பெரும் சிரமத்தை சந்திக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஐநா பொதுச் செயலாளரின் இந்த வேண்டுகோள், உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரான் இந்த வேண்டுகோளுக்கு எப்படி பதிலளிக்கும் என்பதை அடுத்த சில நாட்களில் பார்க்க வேண்டும்.
தற்போது ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் இந்தப் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. விரைவில் ஜலசந்தி திறக்கப்பட்டு, சாதாரண வர்த்தகம் மீண்டும் தொடங்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்! அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!