×
 

அதிமுகவை அதளபாதளத்தில் தள்ளிவிட்டார் இபிஎஸ்! அவரின் பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு! ஓபிஎஸ் ஆவேசம்!

எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு. அவர் இல்லாத அ.தி.மு.க.வில் ஒன்றிணைவோம் என்றார் ஓபிஎஸ்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அணியுடன் இணைவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள் மத்தியில் ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார். அவர் தனது உரையில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், அ.தி.மு.க. கட்சியை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்காக உருவாக்கினார் என்று கூறினார். ஆனால், இன்று கட்சி அந்த நிலையில் இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறி, எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க.வில் ஒன்றிணைவோம் என்ற வைத்திலிங்கத்தின் கருத்தை தான் வழிமொழிவதாக அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு என்று அவர் கடுமையாக சாடினார்.

இதையும் படிங்க: நயினார் டெல்லி ட்ரிப்! ஓபிஎஸ் கூட்டம் ஒத்திவைப்பு!! அப்போ அது கன்பார்ம் தானா?!

மேலும், இன்றைய கட்சியின் நிலைமை தொண்டர்களுக்கு தெரியும் என்று கூறிய ஓ. பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் தொகையை இழந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். அந்த 7 மக்களவைத் தொகுதிகள் என்றால் 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கு சமம் என்று அவர் விளக்கினார். 

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு சந்தித்த 11 தேர்தல்களில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார். இதனால் கட்சியை பாதாளத்துக்கு தள்ளிவிட்டார் என்று அவர் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தனது ஆதரவாளர்களை கூட்டி வைத்து போலியான பொதுக்குழு உருவாக்கி, ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியதாக ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமி சிறப்பாக கட்சியை நடத்துகிறார், சிறப்பான முதல்வராக இருக்கிறார், அவர் வந்தால் அனைத்து தேர்தல்களிலும் மாபெரும் வெற்றி அடைவோம் என்று கூறி ஒரு பெரிய மாயையை உருவாக்கினார் என்று அவர் விமர்சித்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டம் அ.தி.மு.க.வில் உள்ள உட்கட்சி பூசல்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த விமர்சனம் கட்சி தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எத்தனை தொகுதி? அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!! சூடுபிடிக்கும் தேர்தல்களம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share