×
 

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? தேஜ கூட்டணியில் இடமா? இபிஎஸ் பளீச் பதில்!! வாய்ப்பில்ல ராஜா?!

ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக அணியில் பெரும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனது ஆதரவாளர்களுடன் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். தேனி மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அதிமுக தொண்டர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். தனிக்கட்சியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தேவையற்ற குழப்பங்களை பரப்ப வேண்டாம். டிடிவி தினகரன் நட்பின் காரணமாக என்னை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய அழைத்துள்ளார். 

எதிரும் புதிருமாக இருந்த டிடிவியும் எடப்பாடியும் இப்போது ஒன்றிணைந்துள்ளனர். நானும் இணைய ரெடி. டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? கேட்டுச் சொல்லுங்கள். டிடிவியை மட்டுமல்ல, என்னையும் இணைத்தால்தான் அதிமுகவுக்கு வெற்றி சாத்தியம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்.டி.ஏ கூட்டணிக்கு என்னை யாரும் கூப்புடல!! அப்போ தவெக தானா? ஓபிஎஸ் பேச்சில் சூசகம்!!

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது பலருக்கு ஆச்சரியமளித்தது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு கடும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ் நான்கு வருடங்களாக இதை கேட்டுக்கொண்டிருக்கிறார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் நீக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று திட்டவட்டமாக கூறினார்.

கூட்டணியில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு எடப்பாடி பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் ஓபிஎஸ் கூட்டணியில் இணைவாரா என்பது இன்னும் சஸ்பென்ஸாகவே உள்ளது. பாஜக தலைமை அதிமுக வாக்குகள் சிதறாமல் இருக்க ஓபிஎஸ்ஸை இணைக்க முயற்சி செய்தாலும், எடப்பாடி தரப்பு கடும் நிலைப்பாட்டில் உள்ளது.

ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து ஒன்றிணைப்பு கோரி வருகிறது. டிடிவி தினகரனும் இதை ஆதரிக்கிறார். ஆனால் எடப்பாடியின் மறுப்பால் இந்த முயற்சி தோல்வியடையும் அபாயம் உள்ளது. 2026 தேர்தலில் அதிமுக அணி ஒருங்கிணைந்து களமிறங்குமா என்பது இப்போது பெரிய கேள்வியாக உள்ளது. அடுத்த சில நாட்களில் இது குறித்து தெளிவான முடிவு வரலாம் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

இதையும் படிங்க: ஓபிஎஸ் நல்லவர் தான்!! கூட்டணி குறித்து சூசகம்! க்ரீன் சிக்னல் கொடுத்தார் நயினார் நாகேந்திரன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share