×
 

இன்னும் 6 மாதத்தில் கூட்டணி சுனாமி சுழன்றடிக்கும்... எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்...!

கூட்டணி குறித்து ஆறு மாதத்தில் சுனாமி புயல் என்னமோ அடிக்க காத்திருக்கு, பார்க்கலாம் என்றார்.

காளையார் கோவிலில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் 224வது குருபூஜைவில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மருதுபாண்டியர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் 6.5 கிலோ எடையில் வெள்ளி கவசம் வழங்கி மருது பாண்டியருக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்திய நாட்டின் சுதந்திர சுவாச காற்றை சுவாசிப்பதற்கு மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் போட்ட விதை தான் காரணம் என்பதை நன்றியோடு நினைவு கூறும் வகையில் மரியாதை செலுத்தி வருகிறோம். 6.5 கிலோ இடையிலான வெள்ளிக்கவசம் வழங்கியதை சுட்டிக்காட்டி அவர்கள் செய்த தியாகம் விலை மதிப்பற்றது என்றார். 

 அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் விதத்தில் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  அம்மாவும் சட்ட விதிகளை உருவாக்கினார்கள் . தொண்டர்களுக்கான இயக்கம் இருப்பதற்கு காரணம் கழகத்தின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கும் உரிமை கழகத் தொண்டர்களுக்கு தான் இருக்க வேண்டும் தேர்தல் மூலமாக பொதுச் செயலாளர் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் சட்ட விதி . ஆனால் இன்று நிலைமை என்ன? திமுகவில் இருந்து சில குழு உறுப்பினர்களால் எம்.ஜி.ஆரை நீக்கியது, தனக்கு ஏற்பட்ட  நிலை  வருங்காலத்தில் எந்த பொதுச் செயலாளருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தொண்டர்களால் தேர்வு செய்ய சட்டவிதியை ஏற்படுத்தினர். இந்த விதியை திருத்தம் செய்யவோ ரத்து செய்யவோ புரட்சித்தலைவர் முடிவு எடுத்திருந்தார். அதற்காகத்தான் நாங்கள் இன்று போராடிக் கொண்டிருக்கின்றோம்  இதற்காக உச்சநீதிமன்றத்தில் உயர் நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு  உள்ளோம் என்றார் 

கரூர் மக்களை விஜய் சந்திப்பு குறித்த கேள்விக்கு எது எப்படியோ துயர சம்பவம் நடைபெற்று விட்டது அதற்கு பல காரணம் உண்டு  அங்கு சென்று பார்த்தாலும் சரி வீட்டுக்கு அழைத்து அனுதாபம்  கூறினாலும் பாராட்டத்தான் வேண்டும் சில பல காரணங்களை சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல  ஜனவரி 1ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையம் சுருக்க வாக்காளர் பட்டியல் வெளியிடுவது வழக்கம் அந்த பட்டியலின்படி புதியதாக முப்பது இறந்து போனவர்கள் நீக்குவது போன்ற செயல்கள் கடந்த கால வரலாறு . இந்த பட்டியல் ஏற்கனவே இருந்த வாக்காளர் பட்டியல் நீக்கம் போன்றவற்றை தேர்தல் ஆணையம் போன்றவற்றை வெளியிடுவது தான் வழக்கம் எந்த முறைகேடு இருந்தாலும் அதனை சுட்டிக்காட்டுவது நமது கடமை என்றார் .

இதையும் படிங்க: திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்… அப்புறம் என்ன அவரே சொல்லிட்டாரு..! OPS ஆருடம்..!

கூட்டணி குறித்து ஆறு மாதத்தில் சுனாமி புயல் என்னமோ அடிக்க காத்திருக்கு, பார்க்கலாம் என்றார். இன்றைய சூழ்நிலையில் எல்லா எதிர்க்கட்சிகளும் பிரிந்து வெளியேறி வருவதால், திமுகவுக்கு வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: WAIT & SEE... அமைதி வெற்றிக்கான அறிகுறி... சூசகமாக பேசிய செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share