×
 

ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

“எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆசியுடன் முதல்வர் மீண்டும் பதவியேற்க வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டமன்ற வளாகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச்  சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சந்திப்புக்கு பின்னர் அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்து வருவதால் வாழ்த்து தெரிவிக்க வந்தேன்” எனக் கூறினார். எனினும், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக உள்ள உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் சட்டமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவர், “எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆசியுடன் முதல்வர் மீண்டும் பதவியேற்க வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ததும்பும் தமிழ் பெருமிதம்... திராவிட மாடல் ஆட்சியின் சாதனை...!! புகழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

மேலும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கிய சத்துணவு திட்டம் போல, தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தும் காலை உணவுத் திட்டம் முதல்வரின் பெயருடன் நினைவுகூரப்படும் வகையில் உள்ளது எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து, முதல்வர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என தனது ஆதரவை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், உசிலம்பட்டி தொகுதியில் அடுத்த தேர்தலில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணியின் நிலைப்பாடு மற்றும் திமுகவின் எதிர்கால அரசியல் திட்டம் குறித்து பல்வேறு அரசியல் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு எதிர்கால கூட்டணிகள் மற்றும் நிலைப்பாடுகளுக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதையும் படிங்க: அஜித் குமார் போன்று புனிதன் கொலை..? விசாரிங்க சிஎம் சார்..! Tvk அருண்ராஜ் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share