பல்லடம் சுடுகாட்டில் நரபலியா?... அச்சத்தில் உறைந்த மக்கள்... குழி தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
பல்லடம் அருகே சுடுகாட்டில் நரபலியா? கொலையா? - அஞ்சிய கிராம மக்கள்; குழி தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் அருகே ஆறாக்குளம் பிரிவில் சுடுகாடு உள்ளது,இந்த சுடுகாட்டின் ஓரிடத்தில் குழி தோண்ட்பட்டு அதனை கற்களால் மூடி, பூக்கள் தூவப்பட்டிருந்தது. அதன் அருகில் ஒரு துணியும் கிடந்தது.
இதனை அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். சுடுகாட்டில் ஏதோ சடலம் அவசரம் அவசரமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என பேசியுள்ளனர்.
சிறிய கிராமம் என்பதால் யார் இறந்தாலும் ஊர் மக்களுக்கு தெரிந்து விடுமே, நம் ஊரில் கடந்த இரண்டு நாட்களாக யாரும் இறக்கவில்லையே,இங்கு புதைக்கப்பட்டது யாருடைய சடலமாக இருக்கும் என போகிற போக்கில் பொதுமக்களில் ஒருவர் கொழுத்தி போட இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது.
கிராம மக்களுக்கும் யாரையாவது வெளிப்பகுதியில் கொலை செய்து சடலத்தை இங்கு கொண்டு வந்து புதைத்து இருப்பார்களோ,நரபலியாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இது குறித்து பல்லடம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அதிகாரி, போலீசார் உடனடியாக வந்தனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர், மற்றும் பணியாட்களை கொண்டு சந்தேகத்துக்குரிய அந்த இடத்தை தோண்டினர்.
இதையும் படிங்க: வெடிக்கும் நீட் பிரச்சனை... போராட்டக் களத்தில் குதித்த காங்கிரஸ்... ஸ்தம்பிக்கும் டெல்லி..!!
குழி தோண்ட தொடங்கியது சிறிது நேரத்திலேயே அதில் இருந்து கடுமையான துர்நாற்றமும் வீசியது. இது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, மனித சடலம் இருக்குமா? யாராக இருக்கும் என கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர்.போலீசார் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டிய போது அந்த குழியில் ஒரு நாயின் சடலம் கிடந்தது.
இதையடுத்து, அந்த குழியை மூடி விட போலீசார் அறிவுறுத்தினர். இறந்த நாயின் உடலை, அதன் உரிமையாளர் துணியில் சுற்றிக் கொண்டு வந்து, சுடுகாட்டில் புதைத்துவிட்டு, மலர் தூவி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சுடுகாட்டில் யாரையோ கொலை செய்து புதைத்து வைத்துள்ளனரா என கிராம மக்களிடையே எழுந்த சந்தேகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி போலீசாரையும், வருவாய்த்துறையினரையும் சிறிது நேரம் அலைக் கழித்துவிட்டது.
இப்போது, நாயை புதைத்தது சென்றவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குரல்களை ஒடுக்க முடியாது! தெருக்குறள் அறிவுக்கு ஆதரவாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்!