×
 

பாம்பனில் அடுத்தடுத்து பகீர்...!! 500 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்; திடீரென கடல் நீரை உறிஞ்சிய மேகம்...!

பாம்பனில் கடல் நீரை உறிஞ்சும் மேக கூட்டங்கள்; ஆச்சரியத்தில் கண்டு கழித்த மீனவர்கள்

பாம்பன் சின்ன பாலம் பகுதியில் கடல் 500 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுவதால் படகுகள் தரைதட்டி காணப்படுகிறது சங்குகள்,சிற்பிகள்,வெளியே தெரிகிறது காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருப்பதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

உள்வாங்கிய கடல் :

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாம்பன் சின்னபாலம் பகுதியில் கடல் காலையிலிருந்து சுமார் கரையோர பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

இதையும் படிங்க: சாட்டையை சுழற்ற தயாராகும் விஜய்... இனி தவெக மா.செ.க்களுக்கு தினம் தினம் அதிரடி...!

இதனால் நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தரைதட்டி நிற்கிறது. மேலும் கடல் உள்வாங்கி இருப்பதால் சங்குகள், பாசிகள், சிற்பிகள் அனைத்தும் வெளியே தெரிகிறது. மேலும் மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய நாட்டுப் படகுகளும் படகுகளை கரைக்குக் கொண்டு வர முடியாமல், பிடித்து வந்த மீன்களை கையில் சுமந்தபடி கரைக்கு கொண்டு சேர்த்து வருகின்றனர்.

இதனால் பிடித்து வந்த மீன்கள் கெட்டுப் போகக் கூடிய சூழ்நிலை உள்ளது இதனால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்க முடியாமல் மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதால் மீனவர்கள் மிகுந்த சிரமடைந்துள்ளனர்.

 தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்குவதும் கடல் சீற்றத்துடன் காணப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மீனவர்களின் அச்சத்தை போக்க அரசு இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே மீனவர்களின் கருத்தாக உள்ளது. 

கடல் நீரை உறிஞ்சிய மேகம்:

கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமான வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி வருகின்றது.

இந்த நிலையில் பாம்பன் வடகடல் பகுதியில் திடீரென மேக கூட்டங்கள் கடல் நீரை உறிஞ்சும் அரிய நிகழ்வு நடைபெற்றது. 

இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த மீனவர்கள் கடல் நீரை உறிஞ்சும் மேகக் கூட்டங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு கண்டுக்களித்தோடு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதை அடுத்து தற்போது வேகமாக பரவி வருகின்றது.

இதையும் படிங்க: கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிக்கிறார்கள்?! ராகுல்காந்தி தண்டிக்கப்பட வேண்டாமா? மோடி ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share