×
 

ஓபிஎஸ்-ஐ கூட சேர்க்கலாமா? வேணாமா? உளவுத்துறை கொடுத்த அறிக்கை! திமுக மாஸ்டர் ப்ளான்!

'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்து நிற்பதே தி.மு.க.,விற்கு சாதகம்' என, ரகசிய ஆய்வுக்கு பின், தி.மு.க., முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நிலை தி.மு.க.வுக்கு எப்படி சாதகமாக அமையும் என்பது குறித்து கட்சியின் ரகசிய ஆய்வில் முடிவு வெளியாகியுள்ளது. 

பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பில்லை என்று பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெளிவாக கைவிரித்து விட்டார். பா.ஜ.க. தலைமை அவருக்கு சமுதாய ஓட்டுகள் தனி கட்சி தொடங்கினால் கூட்டணியில் சேர்த்து சீட் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் பன்னீர்செல்வம் அதை நிராகரித்து விட்டார்.

இந்நிலையில் பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் இழுத்து கூட்டணியில் சேர்க்கலாம் என்று தி.மு.க. தலைமை முதலில் யோசித்தது. மூன்று தொகுதிகள் வரை வழங்கி, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகளை பெறலாம் என்று கணக்கு போட்டது.

இதையும் படிங்க: தனித்து விடப்பட்ட OPS..! அவர் இல்லாமலேயே NDA பலமாக தான் இருக்கு... நயினார் பேட்டி..!

ஆனால் ரகசிய சர்வே முடிவுகள் வேறு விதமாக இருந்தன. பன்னீர்செல்வம் தி.மு.க.வில் சேர்ந்தால் அல்லது கூட்டணி வைத்தால் அவரது ஆதரவு ஓட்டுகள் தி.மு.க.வுக்கு கிடைக்காது என்று தெரிய வந்தது.

தி.மு.க. வட்டாரங்கள் கூறுவது: முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் பன்னீர்செல்வம் என்றால் இரட்டை இலை சின்னம் என்ற எண்ணம் ஆழமாக பதிந்து விட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டபோது அவர் தோல்வியடைந்ததே இதற்கு சான்று. மேலும் அவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்ற பிம்பம் தென் மாவட்டங்களில் வலுவாக உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் வழக்கமான ஓட்டுகள் கிடைக்காது.

ஆனால் பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தனித்து நின்றால் மக்களுக்கு அனுதாபம் ஏற்படும். அ.தி.மு.க. ஆதரவு ஓட்டுகளை அவர் பிரிப்பதால் தி.மு.க.வின் வெற்றி எளிதாகும். அவர் போட்டியிடாமல் ஒதுங்கினாலும் இதே நிலை தொடரும். எனவே பன்னீர்செல்வத்தை தனித்து நிற்க வைப்பதே தி.மு.க.வுக்கு அதிகம் சாதகம் என்ற முடிவுக்கு கட்சி தலைமை வந்துள்ளது.

இந்த ரகசிய ஆய்வு முடிவு தமிழக அரசியலில் புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டுகள் எப்படி பிரியும் என்பது தேர்தல் களத்தில் முக்கிய காரணியாக இருக்கும்.

இதையும் படிங்க: ராமதாசுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை..! OPS ஐக்கியமா? செங்கோட்டையன் பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share