×
 

மேகதாது பிரச்சனை... குரல் கொடுக்கும் திமுக... நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ்..!!

நாடாளுமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான பிரச்சனை பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் ஒன்று. இந்தப் பிரச்சனையின் சமீபத்திய மற்றும் முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது மேகதாது அணைத் திட்டம். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மேல் பகுதியில் மேகதாது என்ற இடத்தில் ஒரு பெரிய தடுப்பணை கட்ட முயற்சி செய்து வருவதை தமிழ்நாடு உரிமை மீறல் என்று கருதி கடுமையாக எதிர்க்கிறது. இந்தத் திட்டம் காவிரி நீர் பங்கீடு தீர்ப்புகளை மீறுவதாகவும், தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

மேகதாது இடம் கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில், பெங்களூரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், காவிரியும் அர்க்காவதி ஆறும் இணையும் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. கர்நாடக அரசு இங்கு சுமார் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டத் திட்டமிட்டுள்ளது.

இதன் முக்கிய நோக்கங்கள் பெங்களூருக்கு குடிநீர் வழங்குதல், மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகும். திட்டத்தின் மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இதையும் படிங்க: நான் நல்லா இருக்கேன்!! பேரணியில் பங்கேற்கணும்! மருத்துவ அறிக்கைக்கு இடையில் அனுமதி கேட்கும் சோனம் வாங்சுக்!

இந்த நிலையில், மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க திமுக எம்.பி.க்கள் டிஆர் பாலு மற்றும் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: "மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே அமளி... எதிர்க்கட்சி முழக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா!"

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share