×
 

பேரிடர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு! ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் வேகம் தேவை!

வெப்ப அலை மற்றும் இடி தாக்குதல்களை தேசிய அளவிலான பேரிடர் பட்டியலில் சேர்த்து, அவற்றால் பாதிக்கப்படுவோருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவி வழங்க வேண்டும் என்றும் குழு பரிந்துரை செய்துள்ளது.

பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை மற்றும் தயாரிப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான பார்லிமென்ட் நிலைக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கடைகோடி கிராமங்கள் வரை முன்னெச்சரிக்கை தகவல்கள் சென்றடையும் வகையில் தகவல் தொடர்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தியுள்ளது.

பா.ஜ.க. எம்.பி. ராதா மோகன் தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, தமிழகத்திற்கு நேரடியாக வந்து பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பேரிடர் ஆயத்த நிலை தொடர்பான அறிக்கையில் தமிழகத்தின் நடவடிக்கைகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிகழ்நேர வெள்ள அபாய முன்அறிவிப்பு அமைப்பு, ‘டி.என். அலெர்ட்’, ‘டி.என். ஸ்மார்ட் 2.0’ போன்ற மொபைல் செயலிகள் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை விரைவாக கொண்டு சேர்ப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக முதலீட்டாளர்களுக்கு ஆந்திரா குறி! சென்னை, கோவையில் சந்திப்பு நிகழ்ச்சி! தமிழகம் தடை!

முக்கிய கோவில்களில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் அமைத்தல், சி.சி.டி.வி. கண்காணிப்பு, தீ விபத்து மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள், திருவிழாக்களின் போது அவசரகால மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாக குழு தெரிவித்துள்ளது.

மேலும், பேரிடர் காலங்களில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மற்றும் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பயன்படுத்தி வருவதையும் குழு பாராட்டியுள்ளது.

இருப்பினும், மாநிலத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை பேரிடர் முன்னெச்சரிக்கை தகவல்கள் விரைவாக சென்றடைவதற்கான தகவல் தொடர்பு அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் விரிவான பேரிடர் அபாய மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, வெப்ப அலை மற்றும் இடி தாக்குதல்களை தேசிய அளவிலான பேரிடர் பட்டியலில் சேர்த்து, அவற்றால் பாதிக்கப்படுவோருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவி வழங்க வேண்டும் என்றும் குழு பரிந்துரை செய்துள்ளது.

வரும் 2026 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் பேரிடர் மேலாண்மைக்காக ரூ.2.83 லட்சம் கோடி அளவிலான நிதி ஒதுக்கீட்டு கட்டமைப்பை உருவாக்கவும் பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதனால், தமிழகத்தின் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் மட்டுமின்றி, நாடு முழுவதும் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: குட் நியூஸ்! தமிழக ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு ஜப்பானில் வேலை! நிசான் நிறுவனத்துடன் தவெக அரசு ஒப்பந்தம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share