×
 
☰

புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

அரசு ரூ.1,200 கோடி செலவில் புதிய கட்டிடம் அமைப்பதற்கு பதிலாக, தற்போது செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தை மேம்படுத்தலாம் உள்ளிட்ட கருத்துகளும் மனுவில் முன்வைக்கப்பட்டிருந்தன.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரர் தனது மனுவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்கான அரசாணையும் செப்டம்பர் 8-ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்துக்கு அரசியல் கட்சிகள், மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்றும், சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தின் தலைமைச் செயலகம்..! மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு.! பின் வாங்குமா அரசு.?

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை விதிக்கக் கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அரசு ரூ.1,200 கோடி செலவில் புதிய கட்டிடம் அமைப்பதற்கு பதிலாக, தற்போது செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தை மேம்படுத்தலாம் உள்ளிட்ட கருத்துகளும் மனுவில் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இதேபோன்று புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு குறித்தும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநல வழக்குகள் விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அபராதம் விதிப்பது தொடர்பாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பட்டினப்பாக்கம் திட்டம் தொடர்பாக பிற வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. எனவே, ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலக திட்டத்தைச் சுற்றியுள்ள சட்டரீதியான விவகாரங்கள் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாக இதை கருத முடியாது.

இதையும் படிங்க: புதிய தலைமை செயலகம் கட்ட வாஸ்து! திணறும் அதிகாரிகள்! மாற்று இடம் தேர்வில் தமிழக அரசுக்கு சிக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share