×
 

அடம் பிடித்த இபிஎஸ்! இறங்கி வந்த பாஜக! தேர்தல் பொறுப்பாளர் நியமனத்தின் ரகசிய பின்னணி!

தமிழக பா.ஜ. தேர்தல் பொறுப்பாளராக இருந்த பைஜயந்த் பாண்டாவை மாற்றிவிட்டு, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயலை, ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.

டெல்லி: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, பாஜகவில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஒடிஷா எம்.பி. பைஜயந்த் பாண்டா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா செய்துள்ளார்.

இந்த மாற்றம் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்தின்படி நடந்திருப்பதாக பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழக தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டா நியமிக்கப்பட்டார். அவர் சென்னை வந்து எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து கூட்டணி குறித்து பேசினார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில், பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் நிலவரம் நன்றாகத் தெரியும் என்றும், பழனிசாமி மட்டுமின்றி முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி உள்ளிட்டோருடன் நல்ல நட்பு உள்ளது என்றும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: அமித் ஷா சீக்ரெட் ஆப்ரேஷன் சக்சஸ்!! தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! 3 நாள் விசிட்!

பியூஷ் கோயலை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கும் என்று பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இதைத் தெரிவித்தார். அதன் விளைவாகவே பியூஷ் கோயல் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெவே இணைப் பொறுப்பாளராக உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகனுடன், மற்றொரு இணைப் பொறுப்பாளராக இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்கள் தமிழகத்தில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திமுகவை கடுப்பேத்தும் பாஜகவின் ‘சூப்பர் பிளான்’! டெல்லி வரை பறக்கும் ரிப்போர்ட்! “மாஸ்டர் ஸ்ட்ரோக்”!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share