×
 

எல்லையில் அத்துமீறிய பாக்.! துடிதுடித்து இறந்த இந்தியர்கள்... பிரதமருடன் BSF தலைவர் முக்கிய ஆலோசனை

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், பிரதமர் மோடியை எல்லைப் பாதுகாப்பு தலைவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான முஷரபாபாத், பஹவல்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்திய ராணுவம் குறி வைத்து தாக்குதல் நடத்தியது. ஆப்ரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகளின் 9 எல்லைகள் குறி வைத்து தாக்கப்பட்டன. இதில், 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 55 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி எல்லைப்பகுதியில் நடத்திய தாக்குதலில் 15 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை அடுத்து எல்லைப் பகுதியில் அப்பாவி மக்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்! ஆதாரம் திரட்டும் என்.ஐ.ஏ.! கருவறுக்க காத்திருக்கும் இந்தியா

இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ப்படை தலைவர் சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். எல்லைப்பகுதியில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது, போர்கால நடவடிக்கைகள், பதிலடி தாக்குதல் உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: ராணுவ வீரர்களுக்கு சல்யூட்! ஆபரேஷன் சிந்தூர் முழு வெற்றி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share