இத மட்டும் என்னைக்கும் மறந்துடாதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!
'வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பாஜ தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறது. நம் நாட்டை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்,' என்று பாஜ நிறுவன நாளில் தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜகவின் 46ஆவது நிறுவன நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களுக்கு உற்சாக அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 6, 1980 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி இன்று 46ஆவது ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “நாடு முழுவதும் உள்ள அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் கட்சி நிறுவன நாள் வாழ்த்துகள்” என்று தொடங்கினார்.
“தாய்நாட்டுக்கு பிறகு தான் அனைத்தும் என்ற கொள்கையின் அடிப்படையில் சமூகப் பணிகளை நமது கட்சி மேற்கொண்டு வருகிறது. சுயநலமில்லாத சேவை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நல்லாட்சியின் மீதான ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்கள் தான் நமது கட்சி தொண்டர்கள்” என்று புகழ்ந்த பிரதமர், “கட்சியின் சித்தாந்தம் மற்றும் பணிகளுடன் மக்களை இணைப்பதற்காக தொண்டர்கள் அடிமட்ட அளவில் அயராது உழைத்து வருகின்றனர்” என்றும் குறிப்பிட்டார்.
பல வருடங்களாக கட்சியின் வளர்ச்சிக்காக தியாகம் செய்த எண்ணற்ற தொண்டர்களின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், “மக்களின் நலனை தனது தொலைநோக்குப் பார்வையின் மையமாகக் கொண்ட ஒரு கட்சியாக பாஜக திகழ்கிறது. இது மத்தியிலும், பல மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான ஆட்சிகள் மூலம் பிரதிபலிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: கறாராய் நோ சொன்ன மோடி!! ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணக்கூடாது! பாஜகவினருக்கு அட்வைஸ்!
“வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பாஜக தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறது. நம் நாட்டை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்” என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, “இந்த ஒருங்கிணைந்த உறுதிப்பாடு நம்மை மேலும் வழிநடத்தும்” என்றும் தெரிவித்தார்.
பாஜகவின் நிறுவன நாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமரின் இந்த செய்தி தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. “தேசத்துக்கு முன் தன்னை” என்ற கொள்கையுடன் தொண்டர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!