×
 

சப்தமில்லாமல் மோடி நிகழ்த்திய மற்றொரு சாதனை! முதல்வர் முதல் பிரதமர் வரை! முதலிடத்தில் தொடரும் மோடி!

மாநிலங்களில் முதல்வராக இருந்து பின்னர் நாட்டின் பிரதமராக மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர். அவர்களில் அதிகம் நாள் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்து பிரதமர் மோடி புதிய சாதனை படைத்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் மாநில முதல்வராகவும், பின்னர் நாட்டின் பிரதமராகவும் அதிக நாட்கள் பதவி வகித்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடி புதிய வரலாறு படைத்துள்ளார். மொத்தம் 9010 நாட்கள் இரு உயர் பதவிகளிலும் இருந்து அவர் சாதித்துள்ள சாதனை, இதுவரை யாரும் எட்டாத உயரம் எனக் கூறப்படுகிறது.

குஜராத் முதல்வராக 2001 முதல் 2014 வரை 4611 நாட்கள் பதவியில் இருந்த மோடி, 2014-ல் பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது பிரதமராக 4399 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 9010 நாட்கள் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்ட கால பிரதமர் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ள மோடி, முதல்வர் பதவியிலும் நீண்ட காலம் இருந்து இரட்டை சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் உள்ளார். அவர் பம்பாய் முதல்வராக 1655 நாட்களும், பிரதமராக 857 நாட்களும் என மொத்தம் 2512 நாட்கள் பதவியில் இருந்தார். மூன்றாவது இடத்தில் உள்ள பி.வி. நரசிம்மராவ் ஆந்திர முதல்வராக 469 நாட்களும், பிரதமராக 1793 நாட்களும் என 2261 நாட்கள் இருந்தார்.

இதையும் படிங்க: நம்பர் 1 இந்திய பிரதமர்!! புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

நான்காவது இடத்தில் வி.பி. சிங் 1115 நாட்களும், ஐந்தாவது இடத்தில் எச்.டி. தேவகவுடா 863 நாட்களும், ஆறாவது இடத்தில் சரண் சிங் 726 நாட்களும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த சாதனைக்கு நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது தொடக்க காலத்தில் மாநில அரசியலில் தடம் பதித்து, பின்னர் தேசிய அரசியலில் வலுவான தலைவராக உருவெடுத்த விதம் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த சாதனை இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகப் பதிவாகியுள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துள்ள மோடியின் பயணம் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share