பீதியை கிளப்பும் காங்கிரஸ்! பொய் மட்டும்தான் தெரியுமா? பொறுப்பான கட்சியாசெயல்படுங்க! மோடி விமர்சனம்!
''போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் பீதியை ஏற்படுத்தி வருகிறது. அது பொறுப்பான கட்சியாக செயல்பட தவறிவிட்டது'' என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சார் நகரில் ரூ.23,550 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
“போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. அது பொறுப்பான கட்சியாக செயல்படத் தவறிவிட்டது” என்று குற்றம்சாட்டினார்.
மோடி தனது உரையில், காங்கிரஸ் ஆட்சியின் போது அசாம் இளைஞர்களை வன்முறை, பயங்கரவாதப் பாதைக்கு வழிநடத்தியதாக குற்றம்சாட்டினார். “காங்கிரஸ் வட கிழக்கு மாநிலங்களை புறக்கணித்துவிட்டது.
இதையும் படிங்க: மதுரை ஏர்போர்ட்டிற்கு கிடைச்சாச்சு சர்வதேச அந்தஸ்து..!! வெளியானது அறிவிப்பாணை..!! தென் தமிழகத்துக்கு பெரும் வரப்பிரசாதம்..!!
வளர்ச்சி பாதையில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜகவின் தாரக மந்திரம். எல்லைப் பகுதிகளை காங்கிரஸ் நாட்டின் கடைசி கிராமங்களாக கருதியது. ஆனால் நாங்கள் முதல் கிராமங்களாக கருதினோம்” என்று விளக்கினார்.
மேலும், “ஒரு காலத்தில் வர்த்தக மையமாக திகழ்ந்த பராக் பள்ளத்தாக்கின் வலிமை பறிக்கப்பட்டுவிட்டது. இரட்டை இன்ஜின் அரசு இதை மாற்றியமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
காங்கிரஸ் எங்கு சிந்திப்பதை நிறுத்துகிறதோ, அங்கிருந்து நாங்கள் பணியைத் தொடங்குகிறோம். காங்கிரசுக்கு அசாம் அல்லது நாடு குறித்த தொலைநோக்குப் பார்வை இல்லை. அவர்கள் அறிந்தது அவதூறு, வதந்திகள், பொய்களை பரப்புவது மட்டுமே” என்று சாடினார்.
இந்த திட்டங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் அடங்கும். அசாம் தேர்தல் நெருங்கும் நிலையில் மோடியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் தாக்கம் குறித்த விமர்சனம், காங்கிரஸின் பீதி பரப்பல் என்ற குற்றச்சாட்டு தேசிய அளவில் விவாதத்தை தூண்டியுள்ளது. பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசு வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்பதை மோடி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் இதற்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவிற்கு பதிலடி நிச்சயம்! போர்க்கப்பல் தகர்ப்பு குறித்து ஈரான் தளபதி ஆவேசம்!