×
 

பயங்கரவாதம், நக்சலிசத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.. பிரதமர் மோடி திட்டவட்டம்..!

பயங்கரவாதத்தையும், நக்சலிசத்தையும் ஏற்க மாட்டோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது வடகிழக்கு நமது நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதி என்றும் வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கின் பன்முகத்தன்மை அதன் பலமாக இருந்து வருவதாகவும் கூறினார்.

 கிழக்கு என்பது தங்களுக்கு வெறும் திசையல்ல. கிழக்கு என்றால் அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் என்று பொருள் என கூறிய பிரதமர் வடகிழக்கு ஒரு எல்லைப் பகுதி மட்டுமே வளர்ச்சியின் முன்னணியில் மாறி வருவதாக கூறினார். வடகிழக்கு என்றால் உயிரியல் பொருளாதாரம், மூங்கில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு, திறன், சுற்றுச்சூழல் சுற்றுலாவின் வளர்ந்து வரும் மையம் என்றும் அது ஆற்றலின் சக்தி மையமாக உள்ளது எனவும் வடகிழக்கு நமக்கு அஷ்டலட்சுமி போன்றது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: ED வந்தால் ஓடிப் போய் மோடியை பார்க்கிறார் ஸ்டாலின்... சீமான் செம்ம கலாய்!

பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, நக்சலிசமாக இருந்தாலும் சரி, தங்கள் அரசு சகித்து கொள்ளாது என்று திட்டவட்டமாக கூறிய அவர், வடகிழக்கு முன்பு குண்டுகள், துப்பாக்கிகள், ராக்கெட்டுகளுக்கு இடையே இருந்தது என்றும் அவை அங்குள்ள இளைஞர்களிடமிருந்து பல வாய்ப்புகளைப் பறித்தாகவும், கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வன்முறையை கைவிட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share