அன்புமணி கொடுத்த அனைத்து ஆதாரங்களும் பொய் - நீதிமன்றம் சொன்ன ஷாக்கிங் தகவல்... புட்டு, புட்டு வைத்த அருள் எம்.எல்.ஏ...!
அன்புமணி கொடுத்த தரவுகள் அனைத்தும் பொய் என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என சட்டமன்ற உறுப்பினரும், ராமதாஸ் ஆதரவளாருமான அருள் தகவல்
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது , டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. நீதி சாகவில்லை என்ற வகையில் உச்ச நீதிமன்றம் 34 பக்கம் கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.யார் தலைவர் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தை அன்புமணியின் தரப்பு ஏமாற்றியுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. 28/05/22 ல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் , 22/06/22 அன்று தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததாக தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி கடிதம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தகவலை வைத்து தேர்தல் ஆணையம் அப்போது அங்கீகாரம் வழங்கியது.
தற்போது அதனை திருத்தி 2022 என்பதை 2023 என திருத்தி பொய்யான தகவலை அன்புமணி கொடுத்து , நான் தான் தலைவர் என்று கூறி வருகிறார்.
தேர்தல் ஆணையம் தற்போது நீதிமன்றத்தில் தெளிவாக கூறிவிட்டது. அன்புமணி தரப்பு கொடுத்த தரவுகள் அனைத்தும் பொய் என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது. எதையும் விசாரிக்காமல் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது செல்லாது. இனி இரண்டு பேருக்கும் மாம்பழ சின்னம் கிடையாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. அன்புமணி தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த , இரண்டு கடிதங்கள் செல்லாது என நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அன்புமணி , இனி தலைவர் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது.
இதையும் படிங்க: “வயிறு எரிஞ்சு சொல்றேன்... இதோட உன் அரசியல் பயணம் முடிஞ்சு போச்சு...” - அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்...!
கட்சியின் விதியின் 13 படி தலைவர் , பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளை தேர்ந்தெடுக்க நிறுவனருக்கு அதிகாரம் உள்ளது. எனவே உச்சம் பெற்ற பதவியான நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு , நிறுவனத் தலைவர் பதவி தற்போது உள்ளது. மேலும் 17/08/25 ல் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் தான் தலைவர் என நியமிக்கப்பட்டுள்ளது. எனவே தலைவர் இனி ராமதாஸ் அவர்கள் தான்.
வழக்கறிஞர் பாலு , அன்புமணியை திருப்திப்படுத்த பொய்யான தகவலையே கூறுகிறார்.
ராமதாஸ் தலைவர் இல்லை என்றால் அதை, அன்புமணி தரப்பு தான் இனி நிரூபிக்க வேண்டும். நீதி , நேர்மை , நியாயம் ராமதாஸ் பக்கம் தான் உள்ளது. தேர்தல் ஆணையத்தை அன்புமணி எப்படி ஏமாற்றினார் என்பது தெரியவில்லை. அன்புமணி தேர்தல் ஆணையத்தை சரி கட்டி விட்டார். தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றம் செல்வார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ராமதாஸை பிள்ளை அன்புமணியாலேயே வீழ்த்த முடியவில்லை , வழக்கறிஞர் பாலு எப்படி வீழ்த்த முடியும். ஆணவத்தின் உச்சத்தில் வழக்கறிஞர் பாலு உள்ளார் . சட்ட அறிவு கொஞ்சம் இல்லாத பாலுவை தவிர்த்து விட்டு, நல்ல வழக்கறிஞர்களை வைத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை அன்புமணி தெரிந்து கொள்ள வேண்டும். குலதெய்வத்துக்கு அன்புமணி கிடா வெட்டினாலும் , அந்த பலன் ராமதாஸ் ஐயாவுக்கு தான் போகும். இதனை குலதெய்வ கோவிலில் அன்புமணி புரிந்திருப்பார்.
இந்த இயக்கத்தை உருவாக்கியவர் டாக்டர் ராமதாஸ் தான் என்று உறுதிபட தெரிவித்த அவர் , தேர்தல் ஆணையத்திற்கு தவறான தரவுகளை கொடுத்தவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பு தொடர்பாக வழக்கறிஞர் பாலு தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வருகிறார் , இது நீதிமன்ற அவமதிப்பாகும். ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட வேண்டும் என்று நினைக்கின்றனர். அன்புமணிக்கும் , பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
ராமதாஸ்அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி விட்டார். பாட்டாளி மக்கள் கட்சி என்பது மருத்துவர் ராமதாஸ் கையில் தான் உள்ளது . எனவே கூட்டணி குறித்து ராமதாஸ் அவர்களிடம் தான் பேச வேண்டும். ஒரு தந்தையை , மகன் கொடுமைப்படுத்துவதை மக்கள் ஏற்கவில்லை , மக்கள் கதறுகிறார்கள். எனவே மக்கள் டாக்டர். ராமதாஸ் பக்கம் தான் உள்ளனர்.
தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படக்கூடாது. ஏன் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டது என புரியவில்லை. ராமதாஸின் மகன் என்பதை தவிர அன்புமணிக்கும் , பாமகவிற்கும் ஒட்டும் இல்லை , உறவும் இல்லை. விரைவில் மாம்பழச்சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும், வரும் தேர்தலில் மாம்பழ சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றார்.
வருகிற 12-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சென்னையிலும் , மாவட்ட தலைவர்கள் தலைமையில் அந்தந்த மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.
என்னோடு அடிக்கடி தொலைபேசியில் பேசியவர்களே , என்னை கொலை செய்ய வேண்டும் என்று நோக்கத்தோடு செயல்படுகின்றனர். 25 ஆண்டு காலம் அன்புமணி வாழ்க என கோசமிட்ட என்னை , கொலை செய்ய அன்புமணி தான் தூண்டியுள்ளார்.
என் மீது நடந்த தாக்குதல் விவகாரத்தில் , இதுவரை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது போன்று பாமகவிற்குள் நடப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி இனி ராமதாஸ் தலைமையில் தான் செயல்படுகிறது என நீதிமன்றம் கூறிவிட்டது , எனவே பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் ராமதாஸ் தலைமையில் செயல்பட கட்சிக்கு வாருங்கள். என்னை கொலை செய்ய தூண்டிய அன்புமணியிடம் , நான் பேச மாட்டேன் என அருள் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “அது மட்டும் நடந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்” - அன்புமணிக்கு சவால் விட்ட ஜி.கே. மணி...!