2026 தேர்தலில் யாருடன் கூட்டணி?... காலையிலேயே அதிரடி அறிவிப்பு.. ட்விஸ்ட் கொடுத்த அன்புமணி...!
இரண்டு மாதத்தில் தேர்தல் கூட்டணி அறிவிக்கப்படும் நாங்கள் அமைக்கும் கூட்டணி மெகா கூட்டணி ஆக இருக்கும் என பாமக அண்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரோட்டரி சங்க நிகழ்ச்சிக்காக மதுரை வந்துள்ளேன். தமிழ்நாட்டில் அன்றாட பல வகையான போராட்டங்கள் திமுக அரசு எதிர்த்து நடைபெறுகிறது. ஒரு பக்கம் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள் இளநிலை உதவி பேராசிரியர்கள் போராடுகிறார்கள். மற்றொருபுறம் துப்புரவு பணியாளர்கள் போராடுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஒரு புறம் போராடுகிறார்கள். செவிலியர்கள் ஒரு புறம் போராடி வருகிறார்கள். மருத்துவர்கள் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள். பெற்றோர்கள் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள். மாணவர்கள் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள்.
பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக ஒரு பக்கம் போராடுகிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். திமுக மீது மிகுந்த கோவத்தில் இருக்கிறார்கள். கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 13% நிறைவேற்றி இருக்கிறார்கள். அனைவரும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் மாற்று கருத்து இல்லை.
அதேபோல தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு -இல் உள்ளது கடந்தாண்டு மைனஸ் 3.8% இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதம் எந்த ஆட்சியிலும் இப்படி இருந்தது இல்லை. கடந்த ஆண்டு உழவர்களின் பயிர் இழப்பீடு கடந்த ஆண்டு நடந்ததுக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை. தமிழகத்தில் நிர்வாகம் என்று எதுவும் இல்லை முதல்வருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடனை மட்டும் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: கட்சியில் இல்லாத அன்புமணி எப்படி என்னை நீக்க முடியும்? பாமக என்றாலே ராமதாஸ் தான்… G.K. மணி திட்டவட்டம்…!
ஒன்பது லட்சத்து 55,000 கோடி கடன். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான் அதிக வட்டி 62,000 கோடிக்கு வட்டி கட்டுகிறார்கள், அதன் பிறகு தான் உத்திரப்பிரதேசம். ஆனால் தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மேல் கொடுக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தைவிட அதிக கடன் தொகை பெற்று அதற்கு வட்டி செலுத்தி வருகிறோம். வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும், தேர்தல் கூட்டணி குறித்து இரண்டு மாதத்தில் அறிவிக்க உள்ளோம். எந்த கட்சியுடன் கூட்டணி விரைவில் அறிவிப்போம் நாங்கள் அமைக்கும் கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்து வெற்றி பெறும் என அன்புமணி ராமதாஸ் கூறினார் .
இதையும் படிங்க: பாமகவிலிருந்து G.K. மணி நீக்கம்... அவதூறு பரப்பியதாக அன்புமணி அதிரடி நடவடிக்கை...!