×
 

மறுபடியும் முதல்ல இருந்தா? - அந்த வார்த்தையைச் சொல்லி அன்புமணியை உசுப்பேற்றிய அருள் எம்.எல்.ஏ... !

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஐயா ராமதாஸிடம் மட்டுமே உள்ளது என்று பாமக எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் அருகேயுள்ள ஆனந்த கவுண்டர் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர்கள் சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் நடைபெற்றது.

 அப்போது  சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி அளிக்கும் போது பாமக பாட்டாளி மக்கள் கட்சி எப்போதுமே அதன் நிறுவனர்  ராமதாஸ் வசம் மட்டுமே உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் எந்த ஒரு இடத்திலும் பாமக அன்புமணிக்கு தான் சொந்தம் என்று குறிப்பிடவில்லை என்றும் அதன் தலைவர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது என்றார். 

அந்த தலைவர் பதவியும் தற்போது முடிவுற்றுப் போனதாக கூறிய அவர், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அய்யா ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பான கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஐயாவைப் பார்த்துக்க துப்பில்ல… சும்மா பேசிக்கிட்டு... அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி

 அன்புமணி Vs ராமதாஸ் சர்ச்சை: 

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர், பாமக பொதுக்குழுவை கூட்டி அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ராமதாஸ் தரப்பு அதனை ஏற்கவில்லை. ராமதாஸ் தான் தலைவர் என அவர் கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக, ராமதாஸ் அறிவித்தார்.

கடந்த ஜூலை ல் தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் தமிழகம், புதுச்சேரிக்கு பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், ' தலைவர், பாமக, 10 திலக் தெரு, திநகர் சென்னை 17 ' என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் பாமகவின் நிரந்தர முகவரி,  தலைமை அலுவலகம், 63, நாட்டு முத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை சென்னை'  என்பதாகும். இதனால் அன்புமணி ஏதோ சூழ்ச்சி செய்திருப்பதாகவும், நிறுவனருக்கே தெரியாமல் முகவரியை மாற்றி மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

அதுமட்டுமின்றி 2022 ல் பாமக தலைவரான அன்புமணியின் பதவிக்காலம் 2025 ல் நிறைவு பெற்றது. தற்போது அவர் பதவியில் இல்லை. தலைவர் பதவியில் இல்லாதவர் மாமல்லபுரத்தில் எப்படி பொதுக்குழு கூட்ட முடியும். பாமக விதியின்படி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகக்குழு, பொதுக்குழு, செயற்குழு செயல்படக்கூடாது. விதியை மீறி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியாது என ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: தயவு செஞ்சி வராதீங்க... அன்புமணி தலையில் இடியை இறங்கிய ஜி.கே.மணி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share