'கலைஞரை அடக்கம் செய்ய இடம் பிடித்து கொடுத்தவர் ராமதாஸ்' - ஸ்டாலினை கிழிகிழியென கிழித்த வழக்கறிஞர் பாலு...!
லைஞர் சொன்னார் அண்ணாவினுடைய ஆசைபடி அவர் அருகிலே என்னை அடக்கம் செய்யுங்கள் என்று கேட்டு கேட்டுக்கொண்டார்.
பாட்டாளி சொந்தங்களே இந்த மாநாட்டினுடைய அடிப்படையான நோக்கம் சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதி. அருமைச் சொந்தங்களே தமிழக அரசில் 398 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்றைக்கு பணியிலே இருக்கிறார்கள். 398 ஐஏஎஸ் அதிகாரிகளில் 20% மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமூகத்தில் வெறும் 18 பேர் மட்டும்தான் இன்றைக்கு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இது வெறும் 4.8 எட்டு விழுக்காடு மட்டும்தான் ஒரு அரசினுடைய கொள்கையை ஒரு அரசினுடைய நிலைபாட்டை இந்த மக்களுக்கு வழங்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றக்கூடிய அரசு செயலாளர்களில் வன்னியர்களுடைய நிலை என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இதற்காகத்தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் என்று நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் கலைஞர் சொன்னார் அண்ணாவினுடைய ஆசைபடி அவர் அருகிலே என்னை அடக்கம் செய்யுங்கள் என்று கேட்டு கேட்டுக்கொண்டார். அன்றைக்கு மருத்துவர் ஐயா அவர்கள் இடம் கொடுத்துதான் இன்றைக்கு கலைஞர் அவர்கள் மெரினாவிலே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது வரலாறு. கலைஞருக்கு இடம் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி, இந்த உழைக்கும் வர்க்கத்திற்கு இட ஒதுக்கீட்டை கேட்கின்ற பொழுது அதை கொடுக்க மறுக்கின்றார்.
இதையும் படிங்க: பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!
மருத்துவர் ஐயா கலைஞர் அவர்களுக்கு போர்த்திய அவருடைய மஞ்சள் துண்டோடு, அந்த அடையாளத்தோடுதான் தமிழக அரசியலில் வலம் வந்தவர். அவருடைய மகன் ஸ்டாலின் இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பக்கூடிய இந்த கோரிக்கையை திரும்பி பார்க்காமல் இருந்து கொண்டிருக்கக்கூடிய வேளையில் தான் இன்றைக்கு இந்தியா முழுவதும் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்படும் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை அமைச்சரவை கொண்டு வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் தமிழக அரசு இதை செய்யவில்லை என்று சொன்னால் இந்த நேரத்தில் ஒன்றை சொல்கிறேன்.
தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திவிட்டால் மாநிலவில் பிற்படுத்தப்பட்ட மிகப்பெற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு உரிய உள் ஒதுக்கீட்டை வழங்க முடியுமா? என்று சொன்னால் நிச்சயமாக முடியாது. மாநில அரசிற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இல்லை என்று இன்றைக்கு ஸ்டாலின் சொல்வது தற்கொலைக்கு சமமானது. இந்த சமூகம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் என்று சொல்வதற்கு இவர்களுக்கு துரோகம் நிலைத்துவதற்காக திராவிட முன்னேற்ற கழகம் இது ஒரு சமூக நீதி இயக்கம், இட ஒதுக்கிட்டை ஆதரிக்கக்கூடிய இயக்கம் என்று சொல்லக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம் சமூக நீதியினுடைய அடிப்படை கோட்பாட்டை மறந்துவிட்டு மாநில அரசிற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.
அப்படி என்றால் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கக்கூடிய 69 விழுக்காடும் சட்டநாதன், அம்பாசங்கர், நீதியரசர் ஜனார்தனம் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அளவில் இந்த மாநிலத்தில் உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்றுசொன்னால் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும். அதை நடத்துகின்றவரை நம்முடைய போராட்டம் என்பது ஓயாது ஓயாது ஓயாது என அடித்துக்கூறுகிறேன்.
இதையும் படிங்க: பாமக வாகனங்களுக்கு தடை - 13 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை மறக்காத காவல்துறை...!