அப்பா - மகன் சண்டைக்கு எப்போ எண்டு?... தைலாபுரத்தில் அடுத்து நடக்கப்போகும் அதிரடி - ஜி.கே.மணி ஓபன் டாக்...!
பாட்டாளி மக்கள் கட்சியில் நெருக்கடி நிலை சலசலப்பு எல்லாம் மாறிவிட்டது ராமாசுக்கு அன்புமணி ராமதாசுக்குமான் மோதல் சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாகவும்,மிக விரைவில் இருவரும் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசுவார்கள் என ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி தைலாபுரம் தோட்டம் வருகைபுரிந்துள்ளார்.கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாமக கெளர தலைவர் ஜிகே.மணி இன்றைக்கு சமூக நீதிப்பேரவை வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெறுவதின் நோக்கம் ஒவ்வொரு அமைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றார்.
இதையும் படிங்க: தெலங்கானாவை பார்த்து கத்துக்கோங்க! தமிழக அரசுக்கு வழிகாட்டும் அன்புமணி
ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தியுள்ள நிலையில் மாநாட்டின் தொடர்ச்சியாக கட்சியை அமைப்ப ரீதியாக தயார்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், இதேபோன்று நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக கூறினார்.
பாமகவில் நெருக்கடி நிலை சலசலப்பு எல்லாம் மாறிவிட்டது சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாகவும்,மிக விரைவில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் சந்தித்து பேசுவார்கள் கூட்டணி தொடர்பாக தற்போது எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை கூட்டணி என்பது தேர்தல் நெருங்கும் போது பேசி முடிவெடுக்கப்படும் என ஜி கே மணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மின்வாரியத்தின் இழப்புக்கு இதுதான் காரணம்... பாயிண்ட் பாயிண்டா எடுத்து வச்ச ராமதாஸ்!!