அம்மவைவிட மகள் மூத்தவராக இருக்க முடியுமா.? கமலுக்கு ஆதரவாக அன்புமணி ஆவேசம்!
அன்னைத் தமிழ்தான் உலகின் மூத்த மொழி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்னைத் தமிழ்தான் உலகின் மூத்த மொழி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் மாநாடு கமலஹாசன் 'தக்லைஃப்' பட விழாவில் பேசியது கர்நாடகாவில் சர்ச்சையாக்கப்பட்டுள்ளத. கன்னட அமைப்புகள் பலவும் கமல்ஹாசனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீக், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவைதான், இந்த மொழிகள் அனைத்தையும்விட மூத்த மொழி அன்னைத் தமிழ்தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது.
இதையும் படிங்க: இதை செய்யலைனா தக் லைஃப்-க்கு தடை விதிப்போம்... கமலுக்கு கெடு விதித்த கர்நாடகா அமைச்சர்!!
கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதை செய்யலைனா தக் லைஃப்-க்கு தடை விதிப்போம்... கமலுக்கு கெடு விதித்த கர்நாடகா அமைச்சர்!!