“மதிமுகவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட பாலுவுக்கு ராமதாஸ் பற்றி பேச அருகதை இல்ல” - பாமக எம்.எல்.ஏ. அருள் ஆவேசம்...!
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாலு மருத்துவர் ராமதாஸ் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என எம்.எல்.ஏ.அருள் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாலு மருத்துவர் ராமதாஸ் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை பல்வேறு கட்சிகளில் சுற்றி திரிந்து மருத்துவர் ராமதாசிற்கும், அன்புமணிக்கும் சதி செய்து குறுக்கு வழியில் பதவியை பிடித்தவர் தான் பாலு என அக்கட்சியின் எம் எல் ஏ அருள் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றசாட்டுகளுக்கு அன்புமணி ராமதாஸ் 31 ஆம் தேதிகளுக்குள் பதிலளிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டன.
அதனை தொடர்ந்து பேசிய ஒழுங்கு நடவடிக்கை குழுவிலுள்ள சேலம் மேற்கு எம் எல் ஏ அருள் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு என்பது பட்டானூரில் 17 ஆம் தேதி நடைபெற்றது இதில் 4 ஆயிரம் பேருக்கு பதிவு தபால் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு கலந்து கொண்டதாகவும், பாலு பாட்டாளி மக்கள் கட்சி குறித்து பேச எந்த தகுதியும் இல்லை.
இதையும் படிங்க: எல்லாமே DRAMA... வன்னியர்கள் வயித்துல அடிச்சத பத்தி ஏன் பேசல? காடுவெட்டி குரு மகள் தரப்பு குற்றச்சாட்டு
பல்வேறு கட்சிகளில் சுற்றி திரிந்து மருத்துவர் ராமதாசிற்கும், அன்புமணிக்கும் சதி செய்து குறுக்கு வழியில் பதவியை பிடித்ததாக தெரிவித்தார். மக்களை சந்திக்காமல் சென்னையிலிருந்து தேவையற்ற குழப்பங்களை விளைவித்ததினால் சமூக நீதி பேரவை வழக்கறிஞர்கள் கூட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பாலுவின் வளர்ச்சிக்கு உறுதுனையாக இருந்தது பாமக தொடர்ந்து கட்சியின் விரோத நடவடிக்கையில் பாலு ஈடுபட்டதால் கட்சியை விட்டு விலக்கி வைக்கபட்டுள்ளார். கட்சியை விட்டு நீக்கிய பிறகு செய்தி தொடர்பாளர் போல் பாலு அறிக்கை விடுவது கண்டிதக்கது ஏற்புடையது அல்ல என அருள் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி பற்றி சொல்வதற்கு உரிமையில்லாமல் உறுப்பினர் இல்லாமல் பாலு கூறுவது ஏற்புடைதல்ல. பாமகவிற்கும் பாலுவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை எந்த பதவிகளும் பாமகவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அது அய்யா ராமதாசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பாக பொதுக்குழுவை கூட்டி ஒரு வருடத்திற்கு அன்புமணி ராமதாசுக்கு தலைவர் பதவியை நீட்டிகிறார்கள் அது செல்லாது என்றும் அன்புமணிக்கு 28.05.2025 தேதியோடு தலைவர் பதவி முடிந்துவிட்டது பொய்யை மாற்றி மாற்றி கூறினால் உண்மையாகி விடாது.
பாலு சொல்வது என்பது பொய் பொய்யாக பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு வருகிறார்.
அன்புமணி உடன் இருக்கும் மூன்று பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு வைக்கபட்டுள்ளதாகவும்,பாலு புலி மாதிரி தன்னை நினைத்து கொண்டு தவறான செய்திகளை அன்புமணிக்கு கொடுத்து வருவதாக கூறினார். மதிமுகவிலிருந்து இரண்டு முறை துரத்தப்பட்டவர் பாலு. அய்யாவிற்கு துரோகம் இழைக்க பாலுவிற்கு எப்படி மனசு வந்தது? அய்யாவை பற்றி குற்றம் சொல்லகூடாது பாலு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் என சேலம் மேற்கு எம் எல் ஏ அருள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள்! விளக்கம் தரலனா... ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை..!