×
 

திராவிட கட்சியுடன் “டீல் ஓ.கே”... கூட்டணிக்கு தேதி குறித்த ராமதாஸ்... திமுகவா?... அதிமுகவா? குழம்பும் தொண்டர்கள்...!

திராவிட கட்சியோடு தான் கூட்டணி, வரும் 28ஆம் தேதிக்குள் யாருடன் கூட்டணி என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு

பாமகவில் மருத்துவர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் மோதலாக வெடித்ததை தொடர்ந்து பாமகவில் இருந்து தனது மகன் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். இதனால் பாமகவில் மருத்துவர் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தன்னை பாமகவின் தலைவராக அறிவிக்க கோரி மருத்துவர் ராமதாஸ் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இந்திய தேர்தல் ஆணையம், தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணியை பாமகவின் தலைவராக அங்கீகரிப்பதாக தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும், பாமகவின் கொடி மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மருத்துவர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனிடையே அன்புமணி தரப்பு பாமக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து தனது தரப்பு பாமக மற்றும் வன்னியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தற்போது துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கெளரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: அன்புமணிக்கு ஷாக்...!! - ராமதாஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி... ஒரே நாளில் தலைகீழாக மாறிய நிலை...!

இக்கூட்டத்திற்கு நடுவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து தற்போது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த ஆலோசனைக்கு பிறகே எந்த வாகனத்தில் ஏறி பயணிக்க இருக்கிறோம் என்பது குறித்து தெரிய வரும். இதுவரை கூட்டணிக்கான சூழல் அமையவில்லை. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு இருக்கும் என்றார். மேலும் வரும் 28ஆம் தேதிக்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

இதையும் படிங்க: கட்டாய காத்திருப்பு பட்டியலில் பேராசிரியர்கள்... பெரும் அநீதி..!! ராமதாஸ் ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share