×
 

கலைஞர் பாணியைக் கையில் எடுத்த ராமதாஸ்... திமுக ரூட்டில் பயணிக்க முடிவெடுத்த பாமக...!

என் நண்பர் கலைஞருடைய பாணியில் நான் தான் இறுதி மூச்சியிருக்கும் வரை கட்சியின் தலைவர்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  குருமூர்த்தியிடம் பேசணும் பேசிக்கொண்டிருக்கிறோம், பேசிக்கொண்டே இருக்கிறோம். முடிவு எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும், முடிவு இன்னும் வரல உங்களுடைய வாழ்த்துக்களோடு அந்த முடிவு வரலாம்.  அன்றே தினத்தில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டார் அந்த மன்னிப்பை நீங்க ஏற்றுக்கொள்ள எப்படி பார்க்கறீங்க ஏத்துக்கிட்டீங்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ்,  மன்னிப்பு அப்படின்றது பிரச்சனை இல்லை. அதாவது நான் சொன்ன மாதிரி நான் விரும்பிய மாதிரி என்னால் தொடங்கப்பட்ட இந்த கட்சி 96,000 கிராமங்களுக்கு நான் சென்று வளர்த்த இந்த கட்சிக்கு நான் சென்ற முறை சொன்னேன் மீண்டும் சொல்லுகிறேன் எத்தனை முறை வேண்டுமானதான் சொல்லுவேன். இந்த கட்சிக்கு என் மூச்சிருக்கும் வரை நான் தலைவர். அவர் ஸ்டாலினைப் போல செயல் தலைவராக தொடரலாம். 

என் நண்பர் கலைஞருடைய பாணியில் நான் தான் இறுதி மூச்சியிருக்கும் வரை கட்சியின் தலைவர். அவர் 94 வயசு வரைக்கும் சக்கர நாற்காலில் இருந்து கட்சிக்கு தலைவராகவும் ஆட்சிக்கு தலைவராகவும் இருந்தார். இப்பொழுது முதல்வராக இருக்கிற ஸ்டாலின் இப்படி முணுமுணுக்கவில்லை. அப்போது இதுபோன்ற எந்த செய்தியும் வரவில்லை. பத்திரிகை நண்பர்களும் கூட்டம் கூட்டமாக போய் ஸ்டாலினைத் துரத்தவில்லை, ஆனால் நீங்கள் என்னை துரத்தி கொண்டே இருக்கிறீர்கள் என்றார். 

இதையும் படிங்க: #BREAKING: MLA அருளின் கட்சி பதவி பறிப்பு.. செக் வைத்த அன்புமணி! குழப்பத்தில் தொண்டர்கள்..!

60-வது மணநாள் விழாவுக்கு கொண்டாடுங்க. குடும்பத்துல எல்லாரும் கலந்துக்கிட்டாங்க. அன்புமணி ராமதாஸ் வரல. உங்களுடைய மனநிலை அந்த நேரத்துல எப்படி ? என கேள்விக்கேட்ட அவர்,  உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ரெண்டு குழந்தை. நான் என் வயசுல அல்லது என் வயசு கூட வேணாம். உங்களுடைய 25வது மணவிழாவுக்கு உன் பிள்ளை வரலன்னா அல்லது உன் பெண் தெய்வம் வரலன்னா,  பெண் தேவதை வரலன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்? அதே மனநிலை தான் எனக்கும் என வேதனை தெரிவித்தார். 

அன்புமணி ராமதாஸ் போஸ்டர் கிழிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த போஸ்டரையும் கிழிப்பது நாகரீகமானது அல்ல. அப்படி செய்யக்கூடாது என்றார். 

இதையும் படிங்க: #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share