ஒரே பாமக தான்... அன்புமணியே தலைவர்! திலகபாமா பரபரப்பு பேட்டி
பாமக தலைவர் அன்புமணி கூட்டணி குறித்து முடிவெடுப்பார் என திலகபாமா தெரிவித்தார்.
பாமக 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ராமதாஸால் நிறுவப்பட்டது. வன்னியர் சமூகத்தின் அரசியல், சமூக நலன்களை முன்னிறுத்தி இயங்கும் இந்தக் கட்சி, வடக்கு மற்றும் மத்திய தமிழ்நாட்டில் கணிசமான வாக்குத் தொகையைப் பெற்று வருகிறது. கட்சியின் சின்னமான மாம்பழம், அதன் சமூக அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால், கட்சியின் தலைமைப் பதவி குறித்த விதிகள் மற்றும் ஏற்பட்ட குழப்பம் மோதலுக்கு வழிவகுத்தது.
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சி, இப்போது கடுமையான உள் மோதலில் சிக்கியுள்ளது. கட்சியின் நிறுவனர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகன், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான தலைமைப் போட்டி கட்சியை இரண்டாகப் பிரிக்கும் அளவுக்கு முற்றியது.
இந்த மோதலின் உச்சமாக, இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸை கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக அங்கீகரித்து, அவரது பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் 1 வரை நீட்டித்துள்ளது. அதுமட்டுமல்லாது அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியும் என்றும் பாமக நிர்வாகிகளின் பதவி காலத்தையும் நீட்டித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கி இருப்பதாகவும் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். இது ராமதாஸின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், அன்புமணியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு எதுவும் தெரியாதா? அது அவரோட ஸ்டைல்! பிரேமலதா ஓபன் டாக்..!
இந்த நிலையில், அன்புமணி ஆதரவு நிர்வாகி திலகபாமா பேசுகையில், தேர்தல் கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் தான் முடிவெடுப்பார் என தெரிவித்தார். கட்சியை பிளவுபடுத்துபவர்கள் மீது அன்புமணி ராமதாஸ் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். ஒரே பாமக தான் என்றும் அதன் தலைவர் அன்புமணி தான் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: திமுக வாக்குறுதி நிறைவேற்றலயா… விஜய் போட்ட பழி மக்கள்கிட்ட எடுபடுமா! பந்தாடிய மா.சு.