தைலாபுரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ராமதாஸ் வீட்டின் முன்பு திடீரென போலீஸ் குவிப்பு...!
திண்டிவனத்தை எடுத்து தைலாபுரத்தில் இரனண்டு மணி நேரத்தை கடந்து பாமகு நிறுவனர் ராமதாசிடம் சமாதான பேச்சு வார்த்தையானது நடைபெற்று வரக்கூடிய சூழலில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாமகவில் உச்சகட்ட மோதல் நீடித்து வரும் நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அன்புமணி, தனது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் உடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை குறித்து கேள்விப்பட்ட பாமக முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்தில் குவிய ஆரம்பித்தனர். ஆனால் நிர்வாகிகள் யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூறி காவலாளிகள் அவர்களை வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். தைலாபுரத்திற்கு வந்த அன்புமணியை அவரது தாயார் இன்முகத்துடன் வரவேற்றதாக கூறப்படுகிறது.
வீட்டின் கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு, அன்புமணி, ராமதாஸ், அன்புமணியின் கடைசி மகள், அன்புமணியின் தாயார் ஆகிய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் அன்புமணியும், அவரது மகளும் சென்னை கிளம்பிவிட்டனர். அதன் பின்னர் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி இருவரும் தைலாபுரத்தில் ராமதாஸ் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனையானது நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: மூடப்பட்ட கதவு, ரவுண்ட் கட்டிய குடும்பத்தினர்... தைலாபுரத்திற்கு பெரிய கும்பிடு போட்ட அன்புமணி...!
அன்புமணி, ராமதாஸ் இடையே சமாதானம் செய்து வைக்கவே இவர்கள் இருவரும் தைலாபுரம் வந்திருப்பதாகவும், இன்று எப்படியும் அப்பா, மகனுக்குள் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தைலாபுரம் தோட்டத்தின் முன்பு பாமக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் தைலாபுரம் தோட்டம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ராமதாஸை சந்தித்த இரு முக்கிய அரசியல் புள்ளிகள்.. அன்புமணியின் திடீர் தைலாபுரம் விசிட்டின் பரபரப்பு பின்னணி..!