×
 

விஜய்யின் கரூர் பயணத்திற்கு அனுமதி?... ஆனால் அடுத்தடுத்து கட்டுப்பாடுகளை அள்ளிவீசிய காவல்துறை...!

தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. மதியம் ஒரு மணிக்கு விஜய் வருவார் என  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு  கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார் விஜய்.  இதனால் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் ஊருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் விஜய் காலதாமதம் செய்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு அரசியல் தலைவர் ஆவதற்கான தலைமைப் பண்பு இல்லை என ஒரு தரப்பினரும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க எந்த அரசியல் தலைவரும் காவல்துறையிடம் அனுமதி கேட்காத போது விஜய் மட்டும் எதற்காக அனுமதி கோரி தாமதம் செய்து வருகிறார் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

இதனிடையே, கரூர் சம்பவம் அரங்கேறி 10 நாட்களுக்குப் பிறகு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேரின் குடும்பத்துடன் விஜய் வீடியோ காலில் பேசினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நான் நிச்சயம் உங்களை நேரில் வந்து சந்திப்பேன் என விஜய் உறுதியளித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து விஜய் கரூர் செல்வதற்கு அனுமதி கோரி தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பப்பட்டு அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றால், கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அனுமதி கோரவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தயாராக இருந்தனர். 

இதையும் படிங்க: கரூர் சம்பவ விசாரணையில் ஸ்டாலினுக்கு ஏன் இந்த அவசரம்?.. பாயிண்ட்டை பிடித்த இபிஎஸ்..!

இதனிடையே, தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம் எனவும் பயண விவரங்கள் கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி அலுவலகம் தெரிவிப்பு டிஜிபி அலுவலகத்திற்கு தவெக தரப்பினர் அனுமதி கோரி மின்னஞ்சல் அனுப்பி இருந்ததாக தகவல்கள் வெளியான. 

இந்நிலையில், கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் வாகனம் செல்லும் நேரத்தில் பின்னால் யாரும் வர அனுமதி இல்லை என்றும், கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள், ஊடகங்கள் என யாருக்கும் அனுமதி இல்லை என்றும் காவல்துறை சார்பில் கட் அண்ட் கறாராக தவெகவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆலோசித்து தேதியை முடிவு செய்ய திட்டம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: கரூர் துயர சம்பவம்: செந்தில் பாலாஜியை சீண்டிய முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share