×
 

லேடி சூப்பர் ஸ்டாருக்காக கோடிகளை வாரி இறைத்த திமுக... நயன்தாராவுக்காக நடக்குதா திமுக அரசு?... ஆதாரத்துடன் மாரிதாஸ் விளாசல்...!

நயன்தாராவை பற்றி விமர்சித்ததாக கொந்தளிக்கும் திமுக மீது பகீர் குற்றச்சாட்டுக்களை அரசியல் விமர்சகர் மாரிதாஸ் முன்வைத்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசின் 'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டம் குறித்து விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "எனக்கு நயன்தாரா வேண்டும், கனவை நிறைவேற்றுகிறீர்களா?" என பேசியது சர்ச்சையானது. இந்த விவகாரத்தை திமுக எம்.பி. கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி நேற்று நேற்று திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பொதுவெளியில் பேசி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது முன்னாள் அமைச்சர்களின் உருவ பொம்மைகளை பெண்கள் தீயிட்டு கொளுத்தினர். 

தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், நயன்தாராவை பற்றி விமர்சித்ததாக கொந்தளிக்கும் திமுக மீது பகீர் குற்றச்சாட்டுக்களை அரசியல் விமர்சகர் மாரிதாஸ் முன்வைத்துள்ளார். இதுகுறித்த தனது சோசியல் மீடியா பதிவில், நயன்தாராக்கு குரல் கொடுக்கும் திமுகவிற்கு என் கேள்வி! நயன்தாரா ECRல் சரியா சொல்லனும்னா ECR Cycling Track ஒரு திட்டம் கொண்டு வந்தேங்க - அதற்கு சரியாக சில மாதம் முன்பு அதே பகுதியில் சுமார் 30 கோடி மத்திலான இடத்தை நயன்தாரா அவர் கணவர் வாங்கியது எப்படி? சரியா திட்டம் வரப்போகுதுனு எப்படி அவருக்கு தெரிகிறது? ஏன் என்றால் நடிகைக்கு தானே முதல எல்லாம் தெரிகிறது இந்த ஆட்சியில்!

அடுத்து சர்வதேச செஸ் போட்டி சென்னையில் நடத்துவதற்கு அனைத்து டெண்டரையும் எப்படி நயன்தாரா குடும்பத்திற்கு கொடுத்தீர்? எந்த அனுபவமும் இல்லாத அந்த நிறுவனத்திற்கு எப்படி பல கோடி டெண்டர்? அதில் சுமார் 20 கோடிக்கும் மேல் முறைக்கேடு.

இதையும் படிங்க: கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

அடுத்து உங்க உதய நிதிக்கு பினாமியாக திரியும் ரத்தீஸ் வச்சு நடக்கும் money laundering எதிலும் நயன் தாரவிற்கு சம்மந்தம் இல்லை என சொல்கிறீர்களா?. பின்னர் ஏன் ரத்தீஸ் வீட்டில் இரவு பகலாக இருக்கிறார் நயன்தாரா?, ரத்தீஸ் யாருக்காக நயன் தாராவிற்கு இவ்வளவு வேலை செய்கிறான்? எனவே இந்த ஆட்சியில் நடிகைகளுக்கு பெரிய முக்கியதுவம் கொடுத்துள்ளது திமுக அரசு அதற்கு வெக்கப்பட வேண்டும்.

அதில் முக்கியமான நடிகை நயன்தாரா. ஆகவே நயன்தாரா பற்றி அரசியல் ரீதியாக கருத்து சொல்வது தவறே இல்லை - அது ஆபாசமாக இருக்க கூடாது என்பது மட்டுமே தான் ஏற்க கூடியது. நான் சொல்கிறேன் நயன்தாராகளுகாக தான் இந்த திமுக ஆட்சியே 5 வருடம் நடந்தது... என்ன செய்வ? பார்க்கலாம்... கீழ்தரமான ஆட்சியை நடிகைகளுக்கு நடத்திட்டு கோவம் வருது என பதிவிட்டுள்ளார். 

தனது மற்றொரு பதிவில், இந்த ஆதாரம் கவனிப்பீர்.. அது எப்படியா Cycling track போட போகிறோம் என திமுக அரசு அறிவிக்க போகிற நேரத்தில் சரியான (சென்னை ECRல் நீலாங்கரை அடுத்து பீச் ஓரமாக) இடம் வாங்குது நயன்தாரா.. அதுவும் பத்திரபதிவு அலுவலகத்திற்கே வராமல் வாங்கியது. அதுவும் சரியா நிலாங்கரை to அக்கரை வரை Track போட போகிற அரசு திட்டம் வருவதற்கு முன் அந்த நிலத்தை வாங்குது. அதுவும் சுமார் 30 கோடி நிலத்தை 2 கோடிக்கு வாங்குது. எங்கே பதில் சொல்லு இப்போ! ஆட்சியையே நயன்தாராக்களுக்கு நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை முதலில் துரத்தி அடிக்க வேண்டியது திமுகவிற்கு காலம் காலமாக ஓட்டு போடுபவர்கள் தான்.

இதில் இன்று மாதர் சங்கம் நயன்தாராக்கு ஆதரவாக போராட்டம் வேற! இந்த மாதர் சங்கம் அண்ணா நகரில் பெண்குழந்தை 7 நாட்களாக பாலியல் கொடுமை செய்த போது , கோவையில் விமான நிலையம் அருகே 20 வயது பெண் கூட்ட பாலியல் நடந்த போது , தற்போது தூத்துக்குடி 17 வயது பெண் குழந்தை மரணத்திற்கெல்லாம் வராமல் நேரா நயன்தாராவிற்கு பொங்குவது எப்படி? எல்லாமே நம்ம சின்னவர் செட்டிங் தான்... இது யாருக்குமான ஆட்சி அல்ல இது நடிகைகளுக்கான ஆட்சி.

 

இதையும் படிங்க: விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share