எதே... இபிஎஸ் பாஜக வட்ட செயலாளரா?... அதிமுக பொதுச்செயலாளரை அசிங்கப்படுத்திய கருணாஸ்...!
படர்தாமரை உடம்புக்கு நாசம். ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம். பாஜக தாமரை இந்த நாட்டுக்கே நாசம் என்பதை புரிந்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
சிவகாசியில் விருதுநகர் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் கருணாஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முக்குலத்தோர் புலிப்படைக்கான அரசியல் அடையாளத்தை கொடுத்தது ஜெயலலிதா தான். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பாக, தனது சுய செல்வாக்கை பயன்படுத்தி சசிகலாவிடம் பதவியைப் பெற்று அதிமுக கட்சியின் விதிகளை, மரபுகளை மீறி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்டவர் தான் துரோகம் செய்ய மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் துரோகி எடப்பாடி பழனிச்சாமி. எந்த காலத்திலும் எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டணி சேருவதற்கு நான் தயாராக இல்லை. அதிமுகவை உருவாக்கியவர் எம்ஜிஆர். வளர்த்தவர் ஜெயலலிதா. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தன் சுயநலத்திற்காக, தான் செய்த ஊழலை மறைப்பதற்காக, தான் சிறைச்சாலைக்கு செல்லாமல் இருப்பதற்காக அதிமுகவை காவு கொடுத்து விட்டார். சசிகலாவின் காலை பிடித்து பதவியைப் பிடித்து ஆட்சிப் பொறுப்பை ஏற்று சிறைக்கு சென்ற சசிகலாவை மீட்பேன் என உத்தரவாதம் கொடுத்து ஏமாற்றி பதவியைப் பிடித்து சசிகலாவை சிறையில் வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் எடப்பாடி பழனிச்சாமி.
மோடியா? லேடியா? என்று கேட்ட ஜெயலலிதாவின் வார்த்தைகளை மறந்து இன்றைய தினம் அதிமுகவின் பாஜகவின் வட்டச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி மாறிவிட்டார். ஒரு அரசியல் என்பது யாருக்கானது? மக்களுக்கானது. மக்களுடைய வளர்ச்சிக்கானது. ஆனால் தற்போது இன்றைய அரசியல் கடந்த 10 ஆண்டுகளாக முழுக்க முழுக்க மத ரீதியான ஒரு அரசியலாக இந்த தேசத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வரக்கூடிய தேர்தலில் கூட திமுகவுக்கு ஆதரவளித்து வாக்களிக்க வேண்டுமென நாம் சொல்கிறோம். ஏனென்றால் இந்தியாவிலேயே பாஜகவை, ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்களையும், சங்பரிவார் கூட்டங்களின் கொள்கைகளுக்கு எதிராகவும் நிற்கக்கூடிய துணிச்சல் மிக்க முதல்வராக மு. க. ஸ்டாலின் மட்டும்தான் இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
மதத்தின் பெயரால் மக்களை மடைமாற்றம் செய்ய விரும்புகிறார்கள். ஒரு மதத்தின் பெயரால் செய்வதை நாம் எப்படி அரசியலாக ஏற்றுக் கொள்ள முடியும். இன்றைய தினம் பாஜக என்ற அரசு இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களாக ஊடுருவி அங்கு இருக்கக்கூடிய மாநில கட்சிகளை கூட்டணி என்ற போர்வையிலே உள் இழுத்து பின்பாக பல்வேறு குழப்பப்படிகளை செய்து கடைசியாக அந்த கட்சியையே அழித்து அந்தக் கட்சியை தன்னுடைய கட்சியாக மாற்றிக் கொள்வதை தான் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடிவட இந்தியாவிலே தமிழர்களை திருடர்கள் என்று சொல்கிறார்.
இதையும் படிங்க: “வெட்கக்கேடு”... 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திகிலூட்டும் சந்தேகங்கள்... திமுக மீது இபிஎஸ் அட்டாக்...!
தமிழ்நாட்டிலே வந்து திருக்குறள் சொல்லி உங்களை ஏமாற்றுகிறார். நாளை பாஜக,ஆர் எஸ் எஸ், சங்பரிவார் போன்ற கூட்டங்கள் தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்து தலையெடுத்து விட்டால் நம்முடைய வம்சமே அழிந்து விடும். யாரும் வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். வரக்கூடிய தேர்தல் என்பது டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் நடக்கக்கூடிய தேர்தல். தமிழக அரசின் எண்ணற்ற திட்டங்கள் மூலமாக மக்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ திட்டங்கள் இருக்கிறது அந்தத் திட்டங்கள் எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் தமிழகமும், தமிழர்களின் உரிமையும் பாதுகாக்கப்படும். இந்தி மொழி இந்தியாவுக்குள் மட்டும் தான் உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இந்தியை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உலகத்தில் உள்ள பாதி நாடுகள் ஏற்றுக் கொண்ட மொழி தமிழ் மொழி. மதத்தின் பெயரால் மக்களை பிரித்து கேவலமான அரசியலை பாஜக செய்து கொண்டிருக்கிறது.
படர்தாமரை உடம்புக்கு நாசம். ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம். பாஜக தாமரை இந்த நாட்டுக்கே நாசம் என்பதை புரிந்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு அரசியல் தொழில் கிடையாது. அரசியல் எனக்குப் பிழைப்பு கிடையாது. எனக்குத் தொழில் நடிக்கிறது தான். திரைப்படத்தில் வேண்டுமானால் நான் காமெடி பீஸ். என்னுடைய ரியல் பீஸ் என்ன என்பதை சென்னையில் வந்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கடந்த 1987-ம் ஆண்டிலிருந்து 1998- ம் வருடம் வரை இந்த கருணாஸ் என்ற கருணா சென்னையில் என்னென்ன வேலை எல்லாம் சென்னைக்குள் செய்திருக்கிறான் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த மண்ணுக்காக, மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு உறுதியான முதலமைச்சருக்கு பின்னால் நான் இருக்கிறேன் என்பதுதான் எனக்கு பெருமை. மானங்கெட்டவர்கள் தான் எடப்பாடி காலில் விழுவார்கள். எடப்பாடி செய்த துரோகத்திற்கு அவருடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரன் தூக்கு மாட்டிக் கொள்ளலாம். நாங்கள் எல்லாம் பங்காளி என்கின்றனர். இது கேவலமாக தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய தமிழ் இனத்துரோகி. பாஜக அதைவிட பெரிய துரோகி. சசிகலாவை , தினகரனை ஜெயிலில் வைத்தது யார்? ஆர் கே நகர் தொகுதி தேர்தலை ரத்து செய்தது யார்? ஓபிஎஸ்ஐ ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து தர்மயுத்தம் செய்யச் செய்தது யார்? இதனை எல்லாமே செய்தது பாஜக தான்.
இதையும் படிங்க: விரைவில் தொகுதி பங்கீடு... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கணும்...! Ttv தினகரன் விருப்பம்..!!