×
 

அண்ணா விட்டுருங்கண்ணா.. தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த கொடூரம்... இன்று தீர்ப்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/pollachi-abuse-case-coimbatore-womens-court-delivers-verdict-today-703719.html

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி,  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு,  இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்த குற்ற செயல் தொடர்பாக பாதிக்கப்பட்ட  இளம் பெண்கள் பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில்,  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.  

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இதில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் மீது 13 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்ட  பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு,  சபரீசன்,  வசந்தகுமார், சதீஷ்,  மணிவண்ணன்,  அருண்பால் , பாபு ,  அருளானந்தம் ,  அருண்குமார் ஆகிய 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!

இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல்,  கூட்டு சதி,  தடையங்கள் அழிப்பு என பதிமூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.  

இந்த நிலையில் தான்,  இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகிறது.  இதற்காக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரீசன், திருநாவுக்கரசு உள்ளிட்ட ஒன்பது பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதிகாலை 5.20 மணி அளவில் சேலம் மத்திய சிறையில் இருந்து  சேலம் மாநகர காவல் வேன் மூலமாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share