×
 

பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர்...!

பொள்ளாச்சி அருகே  16 வயது சிறுமி ஒருவரும் பாட்டியும் வீட்டிற்குள்ள புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன் பாளையம் பகுதியில்  வசிப்பவர் பூபதி, இவருக்கு 16 மற்றும் 17 வயதை சேர்ந்த இரண்டு மகள்கள் மற்றும் அம்மா மயிலாத்தாவுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நெகமம் அருகே உள்ள கப்பளங்கரை பகுதியைச் சேர்ந்த  அபிஷேக் (24) மற்றும் 16 வயது சேர்ந்த சிறுமியும் மூன்று வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் 16 வயது சிறுமியை அபிஷேக் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் சிறுமிக்கு  திருமண வயது இன்னும் எட்டாத நிலையில் பின்னர் பேசி திருமணம் செய்து கொள்ளலாம் என குடும்பத்த்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அபிஷேக் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. பூபதி வீட்டுக்கு சென்ற அபிஷேக், அங்கிருந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி உள்ளார். இதை சிறுமி மறுக்கவே அபிஷேக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியை குத்தி உள்ளார், மேலும் இதை தடுக்கச் சென்ற பாட்டி மயிலாத்தாவுயும் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கொளசியின் அக்காவான 17 வயது சிறுமி, அபிஷேக்கை தடுத்த போது 17 வயது சிறுமியையும் கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே மயிலாத்தாளும் 17 வயது சிறுமியை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதுமட்டுமில்லாமல் அதை தடுக்க சென்ற அவருடைய அக்காவும் கை மற்றும் முதுகு போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெகமம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து 16 வயது சிறுமி மற்றும் பாட்டி மயிலாத்தா வை கத்தியால் தூக்கி கொலை செய்த இளைஞர் அபிஷேக் நெகமம் காவல் நிலையத்தில் சரண்டடைந்துள்ளார். மேலும் இரட்டைக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

 

 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share