×
 

“கரூர் சம்பவம் மறந்துபோச்சா? - புதுச்சேரியிலும் விஜயால் உயிரிழப்பு ஏற்படும்” - பகீர் கிளப்பும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி...! 

தமிழகத்தைப் போல் விஜய் நடத்தவுள்ள ரோட் ஷோவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை என்றால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ 7ம் வீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 

தவெக கூட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். கரூர் விவகாரம் எல்லோருக்கும் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. கரூர் நெரிசலால் 41 உயிர்களை கரூர் சம்பவத்தில் இழந்துள்ளோம். இது மிகப்பெரிய வருத்தத்துக்குரியது இது எந்த குடும்பத்திற்கும் நடக்க கூடாது. தமிழ்நாட்டில் என்னென்ன விதிமுறைகளைக் கடைப்பிடித்து ரோடு ஷோ நடத்த கூறுகிறார்களோ, அதே போல் புதுச்சேரியிலும் அதே போன்று விதிமுறைகளை அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் இங்கேயும் உயிரிழப்பு ஏற்படும். அப்படி உயிரிழப்பு ஏற்பட்டால் ஆட்சியாளர்கள் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். 

15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மரக்காணம் பக்கத்தில் சினிமா சூட்டிங்கு வந்திருந்தார். அப்போதும் மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன். அப்போது அவர் அரசியலுக்கு வரவில்லை. அவரிடம் பேசும் போது ராகுல் காந்தியை சந்திக்க விருப்பப்பட்டார் பின்னர் அவரையும் சந்தித்தார். அதற்குப் பிறகு தொடர்பு நின்று விட்டது.
விஜய் கட்சிக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  

இதையும் படிங்க: வரலாறு திரும்புகிறது... செங்கோட்டையனை புகழ்ந்து தள்ளிய தவெக நிர்வாகிகள்...!

ரங்கசாமி பாஜக கூட்டணியில் இருந்து வெளியே செல்ல மாட்டார். பாஜக கூட்டணியை விட்டு வெளியே சென்றாள் அவர் மறுநிமிடமே பீகார் ஜெயிலில் இருப்பார். அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறிய அவர், 20 கோடி ரூபாய்க்கு ரங்கசாமி திருமண கட்டடம் கட்டுகிறார். ஒன்றரை கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கி வைத்துள்ளார் எளிமையான முதலமைச்சர் என்று கூறிக்கொண்டு இதையெல்லாம் செய்கிறார்.  நமச்சிவாயம் அவர் பண்ணாத ஊழலே இல்லை அந்த பட்டியலையும் குடியரசுத் தலைவருக்கு கொடுத்துள்ளோம். அவரது துணைவியார் பெயரில் ஏகப்பட்ட சொத்துக்களை அவர் அமைச்சரான பிறகு வாங்கி வைத்துள்ளார். 
லட்சுமிநாராயணன் பொதுப்பணித்துறை 30 சதவீத ஊழல் செய்துள்ளார். தேனி ஜெயக்குமார் அவரது துறையில் மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் பசு மாடு வாங்கியதில் ஊழல் என பட்டியலிட்டு குற்றச்சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஊழல் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் விசாரணையை கேட்டுள்ளோம். 45 காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம் குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அடுத்து நீதிமன்றத்திற்கு செல்வோம் என்றார். 

இந்தியா கூட்டணியில் இருக்கின்ற கூட்டணி கட்சிகளின் வாக்குகள் மாறாது. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் பல பிரிவுகளாக இருக்கின்றனர். அவர்களது வாக்குகள் விஜய்க்கு போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர் இன்னொரு அரசிரல் கட்சித் தலைவருக்கு சோக சம்பவம் நடந்த போது ஆறுதல் கூறுவது இயல்புதான் அதனால் கூட்டணிக்கு செல்வதாக கூற முடியாது. 

இந்தியா கூட்டணியை குலைக்கின்ற வேலையை ஊடகத்தினரும் பார்க்கிறீர்கள் மற்ற அரசியல் கட்சியும் பார்க்கிறார்கள். எந்த அரசியல் கட்சி தான் நாங்கள் வளரவில்லை என்று சொல்வார்கள் அதேபோல் புதுச்சேரியில் திமுகவினர் அவர்கள் கட்சிக்காக சொல்கிறார். 25 இடம் அவர்கள் நிற்பதாக கூறுகிறார்கள் நாங்கள் 30 இடமும் நிற்போம் என்றுதான் கூறுவோம். அவர்கள் நிற்க வேண்டிய இடத்தை கூறத்தான் செய்வார்கள். 
 

இதையும் படிங்க: #BREAKING: 2026ல் விஜய் தான்…! தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share