46 ஆண்டுகால சமூகநீதி போராட்டம்..!! சாதிவாரி கணக்கெடுப்பு... பூவை ஜெகன்மூர்த்தி வரவேற்பு..!
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் முடிவை பூவை ஜெகன் மூர்த்தி வரவேற்று உள்ளார்.
இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் முன்னெடுப்புகள், தொலைநோக்குப் பார்வைகள் உள்ளிட்டவற்றை ஆளுநர் எடுத்துரைத்தார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
46 ஆண்டுகால சமூக நீதிப் போராட்டம் வென்றது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை புரட்சி பாரதம் கட்சி எனவும் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தமிழக அரசு சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது. விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒட்டுமொத்த தமிழகத்தின் நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி இது என்றார்.
46 ஆண்டுகால நீண்ட நெடிய கோரிக்கை என்று சாதிவாரி கணக்கெடுப்பை குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் உண்மையான இடஒதுக்கீடும், மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் சமவாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு எனத் தெரிவித்து உள்ளார். இது இன்று நேற்று எழுந்த கோரிக்கை அல்ல என்றும் கடந்த 46 ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைக்காக தொடர்ந்து ஒலிக்கப்பட்ட குரல் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொடுமை..! அரசு மருத்துவமனைகளில் பறிபோகும் அப்பாவி உயிர்கள்... கொந்தளித்த சீமான்..!!
நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு, தற்போதைய அரசு சட்டமன்றத்தில் இதற்கு உறுதியளித்திருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும், சமூக நீதியை நேசிப்பவர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளார். காலத்தினால் செய்த இந்த நற்செயலை புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக வரவேற்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாற்றம் வரும் என்று நம்பிய பெண்களுக்கு ஏமாற்றம்! தவெக அரசுக்கு எதிராக எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!