யாருடன் கூட்டணி? பியூஷ் கோயலுடன் சந்திப்பா? பிரேமலதா விஜயகாந்த் பிரஸ் மீட்..!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கூட்டணி குறித்த முடிவை இன்னும் இறுதி செய்யாமல் இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை வழிநடத்தி வருகிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, அந்தக் கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்போது அந்த முடிவு தாமதமடைந்து, கட்சி நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.
என் டி ஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இன்று இணைந்துள்ள நிலையில், யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. யாருடன் கூட்டணி என்பதை தானே அழைத்து அறிவிப்பேன் என்று தெரிவித்தார். வரும் 24ம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நான்காம் கட்ட சுற்றுப்பயணம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவித்தோம் என்று தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக பாஜக தங்களை அணுகவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் பிளவு..! தேமுதிக எங்க பக்கம் தான்... ராஜேந்திர பாலாஜி கணிப்பு..!
தொடர்ந்து, பெண் மேலாளர் எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அவர், கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உரிய ஆய்வு நடத்தி அதனை கொலை என கண்டுபிடித்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்ட தெரிவித்தார். மேலும் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசிய பிரேமலதா, இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: நாளை தேமுதிக மாநாடு..! யாருடன் கூட்டணி?.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் பிரேமலதா..!