“விஜய் எங்க வீட்டுப்பிள்ளை தான் ஆனா...” விஜயகாந்த் போட்டோ விவகாரத்தில் பிரேமலதா மீண்டும் கறார்...!
விஜய் எங்கள் வீட்டு பையன் தவெக மாநாடு வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம், திட்டக்குடி, தொளார், ஆவட்டி ஆகிய பகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்
அப்போது பெண்ணாடம் வால் பட்டறையில் இருந்து பேருந்து நிலையம் வரையில் கேப்டன் ரத யாத்திரை நடந்தது. அப்பொழுது பிரேமலதா மேளம் அடித்து முரசு சின்னத்தை கூறினார் பின்னர் அவர் பேருந்து நிலையத்தில் கேப்டன் ரத யாத்திரை வாகனத்தில் இருந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளிடம் கூறியதாவது தேமுதிக வளர்ச்சிக்காக தொகுதிவாரியாக மக்களை சந்தித்து வருகிறோம். 23ஆம் தேதி வரையில் முதல் கட்ட பயணம் நடைபெறும் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு பின்னர் இரண்டாம் கட்ட பயணம் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: தவெக மாநாடு போகப் போறீங்களா..? இதற்கெல்லாம் அதிரடி தடை.. கட்டுப்பாடுகளை முழுசா தெரிஞ்சிக்கோங்க...!
விஜய் எங்கள் வீட்டு பிள்ளை அவர் கேப்டன் பெயரை பயன்படுத்திக் கொள்ளட்டும் கேப்டன் தான் எங்களுடைய மானசீக அரசியல் குரு என்று சொல்லிவிட்டு வைக்க வேண்டும். விஜய் மாநாடு வெற்றி பெற தேமுதிக சார்பில் வாழ்த்துக்கள் அவரது மாநாட்டு திடலில் கொடிமரம் சாய்ந்தது கஷ்டமாக இருந்தது.
எந்தக் கூட்டணி எத்தனை சீட்டுகள் எந்த தொகுதி யார் வேட்பாளர்கள் என்பது குறித்து குருட்டுத்தனமாக கூற முடியாது ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநாட்டில் யார் கூட்டணி என்பதை தெளிவாக அறிவிப்போம் என்றார் இதனைத் தொடர்ந்து திட்டக்குடி ஆவட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: 100 அடி கொடி கம்பம் திடீரென விழுந்தது எப்படி? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை....!